13/05/2016

ஊக்க மது கைவிடு ! - மக்கள் அதிகாரம்

என் தோழா! தமிழகம் டாஸ்மாக் எனும் மதுக் கொள்கையால் சீரழிந்து வருவதைக்
கண்டு சீற்றமுடன் நீயெழுந்து போராட்ட களத்தில் நிற்கிறாய்,,, நீயாரென்று
எனக்குத் தெரியாது ஆனாலும் உனது புகைப்படத்தை கண்டு பதற்றமாகிறேன். இந்த
முதலாளித்துவ சர்வாதிகார அரச பயங்கரவாதிகளின் பாதுகாவலனாக விளங்கும்
காவல் துறையினால் மிகவும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறா­ய்,,, ஆனாலும்
உன் முகத்தில் பயம் இல்லை அதற்கு மாறாக பற்றி எரியும் பெருங் கோபம்
கொந்தளித்தெழுகிறது. "இளங்கன்று பயமறியாது" என்பார்கள் அதற்கு துணையாக
ஏதேனும் எழுச்சி மிகுந்த ஒரு பெரும் சக்தி இருக்க வேண்டும் என்பதை போல
உனது பயமறியா பெரும் புரட்சிக்குப் பின்னால் "மக்கள் அதிகாரம்" எனும்
எழுச்சி மிகுந்த பெரும் சக்தி இருக்கின்ற வரையில் நீ தோற்றுப் போக
மாட்டாய் என உறுதியாகச் சொல்கிறேன். என் தோழா! உனது முகத்தில் வெடித்துக்
கிளம்பும் பெருங் கோபத்தை அணைத்து விடாதே! அதுவே நமக்கான அதிகாரத்தை
மீட்டெடுக்கும் "மக்கள் அதிகாரம் துணையோடு"
நிலைநிறுத்தி வை ! நமக்கு தேர்தலில் இந்த அரசியல் களவாணிகள்
தந்திருக்கும் "பூரண மதுவிலக்கு" எனும் வாக்குறுதியை நிறைவேற்றத்
தவறினால் மீண்டும் புரட்சிப் போராட்டம் வெடிக்கும் என்பதற்கு சாட்சியாக
நிலைநிறுத்தி வை! மூடு டாஸ்மாக்கை! எனும் முழக்கத்தோடு
களமிறங்கியிருக்கும் "மக்கள் அதிகாரம்" இயக்கத்தின் போராட்ட களத்தில்
உன்னோடு பல போராளிகளும் குறிப்பாக பெண்போராளிகளும் ஆளும் அதிமுக அரசின்
அரசப் பயங்கரவாதத்தால் மிகக் கொடூரமான முறையில்
தாக்கப்பட்டிருக்கிறீ­ர்கள். ஆனாலும் போராட்டத்தை தொடரும் தலைநிமிர்ந்த
உங்களின் செயல்பாடுகள் நிச்சயம் இந்த டாஸ்மாக் எனும் மதுக்கடைகள் சூழ்ந்த
தமிழத்திற்கு தேவையாக இருக்கிறது என் தோழா!
மக்கள் அதிகாரம் எனும் இடதுசாரிய இயக்கத்தின் பின்னாலும் , பூரண மது
விலக்கு, மூடு டாஸ்மாக்கை, எனும் புரட்சிப் போராட்டங்களுக்கு பின்னாலும்
மிகப்பெரிய அளவில் வெகுசன மக்கள் அணிதிரண்டிருக்கிறார்­கள் என்பதை
அறிந்ததால்தான் நம் மீது அரசப் பயங்கரவாதம் ஏவி விடப்படுகிறது. மீண்டும்
மீண்டும் உனது தோழனாக முன்வைக்கிறேன் என் தோழா! பட்டுத்தெறிக்கும் உனது
பெருங் கோபத்தை களைத்துவிடாதே! படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவேன்
என வாக்குறுதி கொடுத்திருக்கும் அதிமுக அரசு கடந்து போன ஐந்தாண்டுகளில்
செயல்படுத்த மறுத்துவிட்டது. பூரண மதுவிலக்கே எங்களின் முதல்
நிறைவேற்றமென முழங்கும் திமுக வோ அதன் பிரதான மது ஆலைகளில் முதலாளிய
கம்பெனிகளை நடத்திவருகிறது. எனது முதல் கையெழுத்து "பூரண மதுவிலக்கு" என
காதில் மைக் சொருகி பேசும் பாமகவின் அடித் தொண்டர்கள் வரையில்
கள்ளச்சாராய வியாரிகள் என்பது உலகறிந்த உண்மை, தமிழகத்தில் மதுவிலக்கே
எங்களின் முதன்மை சீர்திருத்தமென சொல்லும் மநகூவிடம் அதற்கான செயல்
திட்டமே இன்னமும் வகுக்கப்படவில்லை, ஆகவே ஆட்சி அதிகாரம் மே 19 ம் தியதி
யாருக்கானதென முடிவாகிவிடும் சூழலில் நமது மக்கள் அதிகாரத்தின் போராட்டம்
முடிவுக்கு வருமா? தொடருமா? என்பது தெரியவில்லை , ஒருவேளை தொடர்ந்தால்
உனது கண்ணத்தில் குருதி வரவழைத்து ருசித்துப் பார்த்த அதே அரச பயங்கரவாத
காவலாளிகள் மீதும் அரசின் மீதும் உனது பெருங் கோபத்தை பிரயோகப்படுத்தி
உனது காலிலும் உன்னைப் போன்றே கோடூரமாக தாக்கப்பட்ட நம் சகோதர,சகோதரிகள்,
தோழர்கள் மற்றும் பெரியார்கள் காலிலும் அந்த அரசப் பயங்கர வாதிகள்
மண்டியிடும் வரையில் நாம் போராட்டம் தொடர வேண்டும். ஆகவேதான் தோழனே! உனது
பெருங்கோபத்தை அப்படியே மனதிற்குள் ஏற்றி எப்போதுமே அதன் மீது செங்கொடியை
பறக்க விடு என் தோழனே!
படம் : மூடு டாஸ்மாக்கை எனும் முழக்கத்தோடு போராட்டம் நடத்திய மக்கள்
அதிகாரம் இயக்கத்தின் மீது காவல் துறையினர் தாக்கியதில் பாதிக்கப்பட்ட
பெயரறியா என் தோழன்.

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...