12/05/2016

மோசடி படிப்புச் சான்றிதழ் புகழ் மோ(ச)டி

1980களில் படித்த நாங்கள் எல்லாம் கைகளால் மதிப்பெண்கள் நிரப்பப்பட்ட
சான்றிதழ்களைப் பெற்றிருக்கக்கூடிய அதே சமயத்தில் மோடி மட்டும் கணினியால்
தயார் செய்யப்பட்ட சான்றிதழைப் பெற்றிருப்பது எப்படி என்று முகநூல்
பக்கங்களிலும், ட்விட்டர் பக்கங்களிலும் பல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி
இருக்கிறார்கள்.
மோடி தில்லிப் பல்லைக் கழகத்தில் பிஏ படித்தார் என்றும், குஜராத்
பல்கலைக் கழகத்தில் எம்ஏ படித்தார் என்றும் பாஜகவின் தலைவர் அமித் ஷா இரு
நாட்களுக்கு முன்பு தில்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
இவர் தெரிவித்த உடனேயே ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஒரு பத்திரிகையாளர்
கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அவை இரண்டுமே போலி சான்றிதழ்கள் என்று
கூறினார்கள்.

இந்நிலையில் பட்டம் வழங்கிய தில்லி பல்கலைகழகத்திற்கு சென்ற ஆம் ஆம்மி
கட்சி தலைவர்களை சந்தித்து அமித்ஷா வெளியிட்டிருக்கும் சான்றிதழின் உண்மை
தன்மையை உறுதிபடுத்துமாறு கூறினர். இதையடுத்து பல்கலைகழக பதிவாளர்
செய்தியாளர்களை சந்தித்து சில தவறுகள் கூறித்து கருத்துக் கூற முடியாது.
சில தவறுகள் எதர்த்தமாக நடைபெறுபவை என கூறியதுடன், அந்த சான்றிதழ்
உண்மையானதுதான். அதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி
மழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அதுவும் போலியான தகவல் என்பது வலைத்தளங்களில் அம்பலமாகி
வருகிறது. இது தொடர்பாக முகநூல் பக்கங்களிலும், ட்விட்டர் பக்கங்களிலும்
பலர் தங்கள் வியப்புக்குறிய கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவர் தான் 1980இல் தில்லிப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது தனக்கு
மதிப்பெண் சான்றிதழ்கள் கையால் எழுதப்பட்டு வந்தன. ஆனால் மோடிக்கு
மட்டும் எப்படி கணினியில் தயாரிக்கப்பட்ட சான்றிதழ் கிடைத்துள்ளது என்று
ஆச்சர்யப்படுகிறார்.
மற்றொருவர், தன் சான்றிதழ் ஒரு வடிவத்திலும் மதிப்பெண்கள்
நிரப்பப்பட்டிருப்பது ஒரு மாதிரியும் இருக்கும்போது மோடி சான்றிதழ்
மட்டம் வேறு வடிவத்திலும், மதிப்பெண்கள் கணினி மூலம் தட்டச்சு
செய்திருப்பதும் எப்படி என்று கேட்கிறார்.
மற்றொருவர் மோடியின் ஒரு சான்றிதழில் failed என்றும் ஒன்றில் passed
என்றும் இருப்பது எப்படி என்று கேட்கிறார்.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல குஜராத் பல்கலைக் கழகத்தில்
மோடிக்குப் பாடம் நடத்திய பேராசிரியர் ஒருவர் மோடி படித்ததாகச்
சொல்லப்படும் பாடங்கள் அப்போது குஜராத் பல்கலைக் கழகத்தில்
சொல்லித்தரப்படவில்லை என்கிறார்.
இவர்கள் எழுப்பியுள்ள சந்தேகங்களை எல்லாம் அமித் ஷா போக்குவாரா என்று ?
அல்லது மீண்டும் ஒரு கதை ஜோடிக்கப்பட்டு வலம் வருமா? என்பதை
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-தீக்கதிர்

எதிர்வினைகள்:

2 comments:

  1. மோடி, கோடி கொடுத்து மோசடி செய்திருப்பார் போல...

    ReplyDelete
  2. ஆர்எஸ்எஸ் பாஜகவின் பணியே மோசடிதானே தோழர்!
    தங்கள் வருகைக்கு
    நன்றி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...