07/05/2016

ஜிஷாவுக்குஜிஷாவுக்கு

நாங்கள் தேர்தல்
கொண்டாட்டத்தில்
குளித்து அழுக்கோடு
அழுக்காகவே
வெளியேறுகிறோம்
எங்களுக்கது
தூய்மையென
கற்பிக்கப்பட்டுள்ளது­
வேண்டுமெனில்
ஆங்காங்கே மீம்ஸ்
போட்டு
விளையாடுவோம்

உனது வலியையும்
வேதனையையும்
அதனுள் புதைத்து
ஆண்டைகள் பெருமை
பேசுவோம்

படிப்பறிவில்
முதலிடமாம்
பெண்
மக்கட்தொகையில்
முதலிடமாம்
கம்யூனிஸத்தின்
புகலிடமாம்
எழிலோவியம்
இயற்கை அழகு
இமயம் வரை பேசுமாம்
இப்படித்தான்
உன் பிணம் விழுந்த
கேரளம் எங்களுக்கு
அறிமுகம்

எதையும் கடுகளவும்
அசைத்திடாத
கொழுத்த முதலைகளாக
முளைத்திருக்கும்
எங்களுக்கு

உனது முலைகள்
அறுக்கப்பட்டு
வயிறு கிழித்து
குடல்களை வெளியே
வீசப்பட்டு
யோனி
பதம்பார்க்கப்பட்டு
தெருவில் வீசியெறிந்த
உயிருக்கு இரையானது
இந்திய மனிதம்
அது என்னவிலையென
கேட்டு கையேந்துவோம்
அதிகார வர்க்கத்திடம்
அப்படியான மனிதர்கள்
நாங்கள் பிணத்தையும்
பங்கிட்டு உண்போம்
பெண்பிணம்
கிடைத்தால்
இன்னமும் மகிழ்ச்சி
குறியும் சேர்ந்து
புசிக்கும் பிணத்தை

ஜிஷா
கொரூமாய்
இறந்து கிடப்பது
நீமட்டுமல்ல
நீ பயின்ற
சட்டமும் கூட

வாழ்தலில்
நாதியற்று கிடக்கிறது
தேசமெங்கும்
ஆணாதிக்கம்
நதியென ஓடுகையில்
வாழ்தல் பகல்கனவே

பெரு சமுத்திரத்தில்
விழுந்து காணாமல்
போகும் அந்த ஒருதுளி
கண்ணீரை போல
கயர்லான்ஜியுடனும்
நிர்பயாவுடனும்
சிவகாசி சிறுமியுடனும்
இன்னும் விடியலை
பார்த்திராத
கோடான கோடி
வன்புணர்வுகளுடனும்
நீயும் காணாமல்
போவாய் ஜிஷா

கயவர்கள் நெஞ்சமும்
கருணையாளர்கள்
நெஞ்சமும் ஒன்றேதான்
அது கல்லேதான்
ஜிஷா

சாதிக்கும் மதத்துக்கும்
யோனிகள் என்றால்
அவ்வளவு பிரியமாம்
அடிக்கடி பிரியோகிக்கும்
ஆணுறுப்புகள்
இந்திய தேசத்திடம்
இளக்காரம் பேசி
விந்தணுவில் விபூதிகள்
பூசிக்கொள்ளும்
நெற்றியில்

இறுதியாக எனது
வலியின்பால்
கேட்கிறேன்

எதற்கு நீ பெண்ணாக
பிறந்தாய்

எதற்கு நீ சட்டம் பயின்றாய்

எதற்கு நீ தலித்தாக
வாழ்ந்தாய்

எதற்கு நீ
இந்தியாவில்
பூர்வக்குடியானாய்

எதற்கு நீ எதற்கு நீ
அடுக்குகள் விரிந்தாலும்
பதில் பேசுகிறது
உனது பிணம் ஜிஷா

அட
பைத்தியக்காரா
புலம்புவதை நிறுத்து
பலியாகி கிடக்கிறேன்
ஆணாதிக்க
வெறியினால்
என்னை புரட்சிக்கு
வித்திடு என்று,,,

ஜிஷா அதற்கும்
வேண்டுமாம்
யோனிகள்
அதுவும் குறிப்பாய்
தலித் யோனிகள்
புரட்சியும் கூட
இங்கே யோனி
சுவைத்த பின்புதான்
பேசுமாம்,,,
பார்த்தாயா உன்
இந்திய தேசத்தின்
உண்மை முகத்தை
ஜிஷா!

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...