07/01/2016

ஆமாம்சாமி அணுகுண்டுகள்

கற்காலம் செதுக்கிய
கல்லறையில்
நிகழ்காலம் வீழ்ந்து
கிடக்க
எதிர்காலம்
காத்திருக்கிறது
மரணத்தின்
வருகைக்காக

கருவை அழிக்கவும்
அணுவை பிரயோகித்து
அவசரமாய் மேலெழும்
புகை மண்டல
யாகத்தீயை
வளர்த்தார்கள்
அணுவிஞ்ஞானி
எனும் பெயரோடு

குழந்தைகளும்
தாய்மார்களும்
தகப்பன்களும்
துடிதுடித்து போனார்கள்
தூது போனது
தவறென்று அறியாமல்

வீசப்பட்ட
அணுகுண்டுகளின்
முகத்தில் தெறிக்கிறது
ஏகபோகமாய்
சிரிப்புகள்
பக்கத்தில் மனிதனை
விழுங்கும் கண்கொத்தி
பாம்புகள்
அலறுகிறது அதன்
தவிப்பிலேயே
மனிதம்

எது அவசரப்படுத்தியது
அவர்களை
எது ஆதரிக்கச் செய்தது
அவர்களை
எது கற்பித்தது
அவர்களுக்கு
அணு என்றுமே ஆபத்தில்லையென்று

மண்தான் நம்மண்தான்
நமக்கானதாக
இல்லை எனும்
அவசர செய்திக்குள்
முடங்கிப் போகும்
மனிதர்களிடத்தில்
மிருகங்களும்
முறையிடுகின்றன
நாங்களென்ன
தவறிழைத்தோமென்று

முடிவை தேடிக்கொண்டு
தண்டனைக்கு
வரிசையாக
இலட்சோபலட்சம்
கும்மிடுகள்
இன்னமும்
போடுகிறார்கள்

அணுதான்
நாம் வாழும்
பூமியின் பிரதான
கண்டுபிடிப்புக்கு
ஆகச் சிறந்த
உதாரணமெனும்

ஆமாம்சாமி!
ஆமாம்சாமி!
ஆமாம்சாமியை,,,

எதிர்வினைகள்:

4 comments:

  1. நண்பரே! வணக்கம். இன்றுதான் உங்கள் தளத்தைப் பார்க்க வாய்த்தது. வாருங்கள் இணையத்தமிழால் இணைவோம்.தொடர்கிறேன், தொடருங்கள் - நா.முத்துநிலவன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...