09/11/2015

இறங்கி வா மேகமே!

மனிதனைப் போலவே
அதுவும் உப்பை
தனக்குள்
இழுத்துக்கொள்கிறது

சுரணை இல்லை
அதற்கென்று யாராலும்
சொல்லி விடவும்
முடியாது

மற்றொன்றை சுரண்டி
எடுக்கவும் தெரியாது
ஆனாலும் சுயமாய்
வெளியிட மறுக்கிறது

தனக்குத் துணையாய்
தன்னுடனே நிறுத்தி
பரிசோசனைக்
கூடத்தில்
பற்ற வைக்கிறது
காற்று கலந்த நெருப்பை

மோதல்கள்
மிகபிடிக்கும் அதற்கு
கடுங்கோபத்தாலோ
வஞ்சத்தாலோ
நிகழ்வதல்ல
அந்த மோதல்

ஆனாலும் கண்ணைக்
குருடாக்கும்
காதை செவிடாக்கும்

மேகமே
என் மழை மேகமே
உந்தன் காதலை
கடலோடும்,காற்றோடும்கரிசனமாய் ஜொலிக்க
வைத்திடும்

புதுப் பொலிவுடன்
காத்திருக்கிறது
இந்த மண்

உப்பை தேனாக்கும்
வித்தை எங்கிருந்து
கற்றாயோ நீ

பாரமாய் இருந்தாலும்
பயமாய் இருந்தாலும்
ரசிக்கத் தோன்றுகிறது
உன் இடியையும்,
மின்னலையும்

பூமிப்பந்தில்
கால்முளைத்த
நெருப்பாய் மழையை
தெளித்துவிடும்
தேகச் சுடர்
ஒளிவிளக்கு
என் தேகம் முழுதும்
உன் ஒளிச்சிதைவு

இறங்கி வா
மேகமே
இனியும் வான்வெளியில்
அலைந்து தேடித்
திரியாதே
அழகான மரஞ்செடி
கொடிகளும்
பசுமைப் பயிர்களும்
மழையின் வரவுக்காக
தவம்புரிகின்றன

இறங்கி வா
மேகமே,,,

எதிர்வினைகள்:

2 comments:

 1. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...