06/11/2015

குழையும் காதல்,

உனக்கு பிடிக்குமா
கண்ணத்தில்
குழி விழுந்தால்

தலையாட்டினேன்
மேலும் கீழுமாக
வலதும் இடதுமாக

தீடீரென்று கண்ணம்
சுறுக்கினாள்
மீன்வாயானது அவளின்
உதடு,,,

இதோ கண்ணக்குழியென்று
காட்டினாள்

கோபமிருந்தாலும்
அதையும் ரசிக்கிறேன்
அத்துணை அழகாக,,,

அவளிடத்தில் இல்லாதொன்றை
எதிர்பார்ப்பது
என் காதலுக்கு அழகில்லை
அனாலும் ஓரு
பொய்க்கோபம்

என் இதயத்தின் உள்ளாழம்
அவளின் கண்கள்
துழாவி எடுக்கையில்
எப்படி மறைக்க முடியுமந்த பொய்க்கோபத்தை

இடைமறித்து
என்னடா!
முறுக்கிறாய்
மீசையை,
காட்டு நானும்
கொஞ்சம்
விளையாடுகிறேன்
மீசையில்
என்கிறாள் என்னவள்,,,

பேச்சை மாற்றி
பேரின்பக் கடலின்
அலைகளை
திசைதிருப்பும் விந்தை
எப்படி கற்றாலோ!

மீண்டும் தொடர்கிறது
தோள்சாய்ந்த படியே
குழையும் காதல்,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...