30/09/2015

உணவில் உரிமை மீறல்

இந்தியச் சமூகம் தனது மதவெறியையும்,சாதி வெறியையும் உணவில் காட்டுவது
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு மனிதன் எதை உண்ணவேண்டும்,எதை
உண்ணக்கூடாதென்று தீர்மானித்து உண்ணக்கூடாது என்று தடைபோடவும்,தடையை
மீறினால் அவர்களை அடித்துக் கொல்லவும் வெறியர்களுக்கு உரிமை
வழங்கப்பட்டிருக்கிறத­ு என்றால் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கி
செயல்படுத்தும் மதமும்,சாதியமும் மனித அழிவுக்கான முதன்மைச்
சமூகவிரோதியாகத்தானே இருக்க முடியும். சமூக விரோதத்தையும் உரிமை
மீறலையும் கண்டிக்காத அல்லது சட்டத்தின்படி குற்றவாளியாக பாவிக்காத அரசு,
இருந்தும் பயனற்றதாகவே பொருளாகும். மாட்டிறைச்சிக்கு எதிராக தற்போது
களமிறங்கியிருக்கும் இவ்வகையிலானச் சமூக விரோதிகளிடம் மிகவும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவலத்திற்கு இந்தியச் சமூகம்
தள்ளப்பட்டிருக்கிறது­ எனும் போது தேசத்தில் பிறந்தமைக்காக அவமானப்படுதலை
விட வேறென்ன பாவனையை வெளிபடுத்த முடியும்.

உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவைச் சேர்ந்தவர் அஃப்சல். இவர் பிசாராவில்
வசித்துவந்தார். அஃப்சல் தனது வீட்டில் மாட்டிறைச்சியை சமைத்து உண்டதாகக்
கூறி.அஃப்சலை அவரின் வீட்டிலிருந்து இழுத்து வந்த இந்துத்தவ வெறியர்கள்
அவரை சரமாரியாக அடித்திருக்கிறது.
இதனை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் ,இந்துத்துவ வெறியர்களிடமிருந்து
அஃப்சலைமீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.­காவல்
துறையின் இச்செயலை கண்டித்த வெறியர்கள் காவல்துறை மீது கற்களை வீசியதால்,
அங்கே கலவரம் மூண்டு வாகனங்கள் எரிக்கப்பட்டன.இதனிடை­யில் அஃப்சல்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள நொய்டா காவல்துறை ஆறு பேரை
கைதுசெய்துள்ளனர். மேலும் நால்வரைத் தேடி வருவதாக குறிப்பட்டுள்ளனர்.

மனித அத்துமீறல்கள் அதிகமாக மண்டிக்கிடக்கும் வகையில் ஒட்டுமொத்த
தேசத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கும்
இந்துத்துவம், மனிதன் உண்ணும் உணவில் தன் மதவெறியை காட்டியிருப்பது
மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் இம்மாதிரியான சமூக அவலங்கள்
தொடர்ந்து நடக்குமேயானால் நிச்சயம் சமத்துவம்,சகோதரத்துவ­ம், சனநாயகம்
ஆகியவை இல்லாது மனித வாழ்வுக்கு ஏற்ற நாடாக நிச்சயம் இருக்காது என்பதே
உண்மையான ஒன்றாகும்.

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...