07/09/2015

காதலெனும் தேன்

எட்டும் தூரத்தில் இருந்தும்
எட்டிப் பறிக்கத் தயங்குகிறாள்

அவளின் பதற்றம் அவளைத்தவிர
அவனுக்கும் தெரிந்திருக்குமோ

திரும்பும் திசைகளெல்லாம் பறக்கும்
பட்டாம் பூச்சிகள்
தங்களுக்காக
சேகரித்த தேனை
காதல் மீது தெளித்துவிட்டு
தன் பசியை புதைத்துவிட

என்றும் பூக்களின் மடியில்
அன்பெனும் வார்த்தை தவழ்ந்து தவழ்ந்து
துள்ளியாடுவதை

தூரத்தில் நின்று
பார்க்க வேண்டுமா!
பயமெதற்கு
காதலென்பது
பிசாசுகளின் வாழ்விடமென்று

கட்டவிழ்த்து விட்டவர்களே
அச்சம் கொள்ளாமல்
வாழவில்லையா

வாழ்த்துதலை வாங்கி மனதில் பூட்டிய
அவள் மெல்லப் பேசுகிறாள்

மயக்கும் மன்னவனே
எனை நீ மணப்பாயோ
உடல் குறுகி நிற்க வைக்கும் தயக்கத்தை என்றோ உடைத்து விட்டாள் அவள்

காதலுக்காக
பட்டாம் பூச்சிகள் செய்த தியாகத்தால்
நிகழ்ந்திருக்காலாம்

பூக்களின் வாசத்தோடு பருகி விட்டாள்
அவள் அன்போடு கலந்த காதலெனும்
தேனை,,,

எதிர்வினைகள்:

3 comments:

 1. அருமை நண்பரே மிகவும் இரசித்தேன் வாழ்த்துகள்
  தமிழ் மணம் இணைய மறுக்கிறதே.... நண்பரே...

  ReplyDelete
 2. அருமையான காதல் தேன் .

  ReplyDelete
 3. மிக்க நன்றி தோழர்!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...