27/07/2015

அவனுக்காக,,,

மிகுதியாய்
சேர்ந்துவிட்ட
அவனின் நினைவுகளை
அப்படியே தக்கவைத்துக்
கொள்கிறேன்

எல்லா
பூக்களின் ஆருதல்
மொழிகளும் போதுமானதாய்
இருக்கிறது

இருந்தும்
புறக்கணித்து விடுகிறேன்
மணமயக்கும்
மல்லிகையை

அவனில்லாத
நேரத்தில்
என் கூந்தலுக்கேன்
மல்லிகையும் அதன்
மணமும்

எங்கோ நெடுந்தூரம்
சென்று விட்டான்
எதுவும் சொல்லாமலே

வாக்குறுதி வாயுவினிடத்தில்
கடைசியாய்
கரைந்தது
என் காதல் சுமந்த
கடலோரத்தில்

வருவாயா என்று
வழிபார்த்து
காத்து கிடந்த
காலத்தில் தொலைத்தேன்
எனதிளமையை

முதுமையை அவன்
விரும்பாதவனில்லை
என் மனதை மட்டுமே
நேசிப்பவனவன்

எனதிதயத்தில்
அவனுக்கொரு
இடமுண்டென்று
நன்குணர்ந்தவனவன்
எனதுடலை
மட்டுமே காதலாக
காட்சியாக்கியதில்லை

விரைந்து வருவான்
விரைவில்
எனை தழுவிக்
கொள்வான் எனும்
எதிர்பார்ப்பில்
எனக்கு நானாகவே
தேற்றிக் கொள்கிறேன்

தேடும் விழிகளில்
வழிந்தோடும்
கண்ணீருக்கு சாட்சியாக
அவன் நின்றெனை
யாசிக்கிறான்

எதுவும் மறந்துபோகலாம்
எனும் விதிக்கு
விலக்காகும்
என் காதலின்
காத்திருப்பு
அவனுக்காக,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...