24/06/2015

களத்து மேட்டு "கருப்பன்"

பாறைகளென்றோ கூழாங்கற்களானது
மாற்றம் தந்த
மலை நதியைத்தான் காணவில்லையிங்கே

களவாடியவன்
கரன்சியில் புரள கட்டியழுவ
கண்ணீரும் வற்றிப்போனது களத்துமேட்டு கருப்பனுக்கு

திண்ண உணவு செரிக்கவில்லையாம்
தினம் குடிக்கிறார்கள் குளிர்பானத்தை

தாகமெடுத்தால்
தண்ணீரில்லை
திணறும் மூச்சோடு
தினம் கடக்கிறான் களத்துமேட்டு
கருப்பன்

உணவில் கலப்படமாம்
ஊரே அலறியது
களத்துமேட்டு
கருப்பன் மட்டுமே சிரித்தான்

உற்பத்திக்கு வழியில்லையெனில் கலப்படம் அவசியம்தானே,,,

பச்சை நிறங்களை
பார்த்தே நாளாகிப்போனதிங்கே நாறும் மனிதர்கள் உடலெங்கும்
பூசிக்கொண்டார்கள்
வாசனைத்
திரவியங்களை

களத்து மேட்டு
கருப்பன் கடைசியாய் அரை கூவலிடுகிறான்

அடேய் மானிடா
ஆற்றை காப்பாற்று
அழ தேவையில்லை
இனி அனைத்தும்
உன்மடியில்
உற்பத்தி தொடங்கிவிட்டால்
கலப்படம் அவசியமில்லை
கண்ணுற்று பாரடா
உற்பத்தி இங்கில்லை

உழுதவன் விதைநெல்லை ஊழல்செய்து விற்றுவிட்டார்கள்

கலப்படமில்லா
பொருள் வேண்டுமா?
களத்து மேட்டுக்கு
நீவாடா,,,
கருப்பனிங்கே காத்திருக்கிறேன்
கொஞ்ச நெல்லையும் காப்பாற்றவேனும்
களத்து மேட்டுக்கு
நீவாடா,,,

கருப்பன் அழைக்கிறான் காதுகொடுக்குமா
இந்த கலப்பட உலகம்,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...