24/06/2015

நீயும் வா என்னோடு,,,

ஓவியங்களை
உறங்குமாறு கட்டளையிடுகிறேன்

கனவினில் தெளிந்த
நீராகத்
தெரிகிறாய் நீ

பறிக்கத் துடித்தால் கண்ணை பறிக்கும்
மலர்களை
மேலோட்டமாய் திட்டித்தீர்க்கிறேன்

கள்ளத்தனமாய்
தேன் திருடும் இதயத்திருடியாகத் தெரிகிறாய் நீ

துள்ளியாடும்
தோகை இளமயிலிடம் கோபித்துக்
கொள்கிறேன்

சலங்கை காலாடும் சில்லிடும்
மழைத் துளிகளாகத் தெரிகிறாய் நீ

நீயும்
கவனித்திருப்பாய்
இந்தக் காதலனின் செய்கைகளை

இறுதியாக உயிரோடு உறவாடும் காதலெனும் மூவெழுத்திடம் மண்டியிட்டு மடியேந்துகிறேன்

சுவற்று
விரிசலைபோல
நம் காதலுக்கேதும் நேர்ந்து விடக்கூடாதென்று

நீயும் வா
என்னோடு

காதலெனும்
மூவெழுத்திடம்
வரம் கேள்
வளரும் பிறைபோல
நம் காதல்
வளரவும்,வாழவும் வேண்டுமென்று,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...