30/06/2015

காதல் தோல்வி

அவன் என்னை
மறந்தும் கடந்தும் எங்கோ சென்று
விட்டதனால்

என் காதல்
தோல்வியை
தழுவியதாய்
காற்றிடம் புலம்பிய பொழுதுகளில்

அழுது விடாத
அதன் அரவணைப்பு
என் கண்ணீருக்கு ஆருதலானது

தோல்வி என்பதை வார்த்தைகளில் உபயோகிக்காதே

உனக்கான சூழலது சந்தர்ப்பங்கள்
சரிவர
அமையாமைக்கு
நீயே காரணம்

புல்லாங்குழல்
வாசிக்கப் பிறந்தவை
அன்றி
வெந்நீரூற்றி விளையாடுதல் முறையோ

துடைத்துவிடு
கண்ணீரை
அழாதே
என்முன்னால்

காற்றின் கரங்கள் எனைத்தழுவி
அரவணைக்க
ஆருதல் வார்த்தைகள்
மனதினை வருடிவிட

காதலில் நான்
தோற்றேனென
மீண்டும்
மறுமொழியிட
மனதிற்கு
தோன்றவில்லை

தோல்வியென்பது
என்றுமே
காதலுக்கில்லையென
இதமான இளங்காற்று உணர்த்திவிட்டு

நகர்கிறது
இன்னொரு காதல்
தோல்வி கண்ட
தோழியினடத்தில்,,,

எதிர்வினைகள்:

2 comments:

 1. தோல்வியுற்றவர்கள்
  துவண்டுவிடாதிருக்கச்
  சொல்லிச் சென்ற கருத்தும்
  சொன்ன விதமும் விதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...