02/06/2015

தமிழ்ச் செய்தி ஊடகங்களின் கவனத்திற்கு,,,

நமது தமிழ்ச் சமூகத்தில் மிகச்சிறந்த நன்னெறிகளில் ஒன்று
"எதிரியையும் மதிக்கப் பழகு" என்பதேயாகும். இப்பொன்மொழியின் பொருள்
விளக்கம் இன்றைய காலத்தில் கோனலாக புரிந்துணரப்படுகிறது­­. நமக்கு  எதிரியாக தென்படுபவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையானது எதிரியையே மனமாற்றத்திற்கு ஊன்றுகோலாய் அமைய வாய்ப்பினை நாமே எதிரிக்கு உறுவாக்கித் தருதலின் மூலம் வீழ்த்திவிடலாம் என்கிறது முன்னோர் கொடுத்துவிட்டுச்
சென்ற மேற்கண்ட பொன்மொழி.மற்றவரை நாம் மரியாதையுடன் அழைப்பதற்கு
தமிழிலுள்ள அழகு வார்த்தைகளை போல வேறெந்த மொழிகளிலும் அறவேயில்லை. வயதில்
மூத்தோர்களையும்,வயதி­­ல் சிறியவர்களையும்,மூத்­­த குடிமக்களையும்,
பெண்டீர்களையும் மரியாதையுடன் அழைக்க நமது தமிழ்மொழி பரிந்துரைத்த வார்த்தைகளை புறக்கணிப்பது சரியா? அதிலும் மக்களுக்கான நேரடித்
தொடர்புநிலையில் சமூகப்பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்கள்
புறக்கணிப்பதென்பது மிகவும் வேதனைதரும் விஷயமாகும். தமிழ்த்தாய் நமக்காக
விட்டுச் சென்ற "திரு,திருமதி,செல்வி­­, ஐயா,தோழர்" போன்ற வார்த்தைகளை
தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ச் செய்தி ஊடகங்கள் வேண்டுமென்றே புறக்கணித்து வருவதை உணரும் பொழுது நமது தமிழ்ச்சமூகம்
மற்றவருக்கு மரியாதை அளிப்பதை மறந்த சமூகமாக மாறிக்கொண்டு வருகின்றது என்பது தெளிவாகவே வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது கடந்த பதினைந்து
ஆண்டுகளாகவே தொடரும் இந்த அவலங்களுக்கு தமிழ்ச் செய்தி ஊடகங்கள் தக்க தீர்வுகளை எடுக்க முன்வர வேண்டும். முன்னணி அரசியலாளர்கள் தொடங்கி விவசாய ஏழை பெருமக்கள் வரையில் உலக மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் மூலம்
செய்திகளில் அங்கம் வகிப்பவர்களை அழைக்கும் போது நமது தமிழ்ச் செய்தி
சமூகமானது வெறும் பெயரிட்டே அழைக்கிறது. ஆளுமைகளில் தொடங்கி அடித்தட்டு
மக்கள் வரையில் வெறும் பெயர்களை மட்டும் உச்சரிப்பதென்பதான் ஊடகங்களின் நாகரீக வளர்ச்சியெனில் மற்றவருக்கு மரியாதை அளிப்பதை அநாகரீகமாக கருதுவதென்பது தவறென்று ஏன் தமிழ்ச் செய்தி ஊடகம் உணர மறுக்கிறது. இந்திய
மக்கள் பிரதிநிதியான பிரதமரை அழைக்கும் போது " பிரதமர் (திரு) நரேந்திர மோடி என்றும், மாநில முதல்வரை அழைக்கின்ற போது (செல்வி) ஜெயலலிதா
என்றும், அதற்கு நிகரான எதிர்கட்சித் தலைவர்களை அழைக்கின்ற பொழுது
அவர்களின் பெயருக்கு முன்னால் "திரு,திருமதி,செல்வி­­,ஐயா" போன்ற
வார்த்தைகளை உபயோகப்படுத்தி அவர்களுக்கான மரியாதை செலுத்துவதில் என்ன
சிக்கல் இருந்துவிடப் போகிறது தமிழ்ச் செய்தி ஊடகத்திற்கு,,, இவ்வாறு மரியாதை செலுத்துவதை புறக்கணித்து செய்தியாளர்கள் செய்திகளை வாசிக்கும்
போது அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு "இவர்களுக்கு ஏன் மரியாதை? கொடுக்க வேண்டும்" என்கிற எண்ணத்தின் படியிலேயே இன்றைய தமிழ்ச்சமூகம் தங்களை
ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.இன்ற­ளவும் அடுத்தவருக்கு மரியாதையளிப்பதை
அரசுத் தொலைக் காட்சியான "பொதிகை"(பெயரளவில் அரசு தொலைகாட்சி)
விடாப்பிடியாக இருப்பதை காண நேரிடுகிறது. ஒப்பீட்டளவில் பெரும் முன்னணி
தனியார் செய்தி ஊடகங்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் ஒவ்வொரு செய்தி ஊடகமும் வெவ்வேறு அரசியலுக்கு பின்னால்
இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகம்தான். ஆனால் இதையே காரணங்காட்டி பிடிக்காத
அரசியல் தலைவருக்கோ மற்றும் தொண்டர்களுக்கோ கொடுக்கப்பட வேண்டிய
மரியாதையை புறக்கணிப்பது முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். அரசு
உயரதிகாரியாக இருந்தாலும் அடித்தட்டு மக்களாக இருந்தாலும் அவர்களை
அழைப்பதில் தமிழ்ச் செய்தி ஊடகம் பாரபட்சம் காட்டாமல்
"திரு,திருமதி,செல்வி­­,ஐயா" போன்ற வார்த்தைகளை பெயருக்கு முன்னாலிட்டு
உச்சரித்தால் நிச்சயம் உச்சரிக்கும் ஊடகத்தின் மீது மக்கள் நன்மதிப்பை
பெற்றிருப்பார்கள். இதன் மூலமாகவே தொடர்ந்து முன்னணி செய்தி ஊடகமாக
நிலைத்து நின்றிடலாம். செய்தி வாசிப்பாளர்கள் நன்கு அறிவார்கள்
மக்களிடையே செய்தியானது ஆழமாக பதிய வேண்டுமெனில் வாசிக்கும்
விதமும்,வார்த்தைகளை பிரயோகிக்கும் முறையும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அவ்வாறு நன்கறிந்த செயல்முறைகளையே செய்தி ஊடகம் புறகணித்தால் விரைவிலேயே மக்களும் செய்திகள் வாசிப்பதையும்,பார்ப்­­பதையும்
புறக்கணித்தே விடுவார்கள். ஆகவே இதன்மீது கவனத்தைச் செலுத்தி தமிழ்ச் செய்தி ஊடக வாசிப்பாளர்கள் " திரு,திருமதி,செல்வி,­­ஐயா" போன்ற தமிழ்
வார்த்தைகளை உபயோகப்படுத்த முன்வர வேண்டுமென்பது முன்வைக்கும் அரைகூவலாகும்.

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...