12/06/2015

மழைக் காதலர்கள்

கவலைகள் மறந்து
கருவிழிகளை
காற்றோடு அலைபாய
விட்ட தருணத்தில்
தவங்கலைந்த
மேகங்கள் கண்ணீரின்
தாகந்தணிக்க
வந்திறங்கியதோ

கழுத்துச் சுளுக்கிற்கு
கவலைபடவில்லை
கண்ணீரே தினம்
காணும் சோக
முகங்களிங்கே
ஏராளம்

சுகமளிக்க இறங்கி
வரும் மழையே
மான்போல துள்ளுகிறது
மனது உனை
பார்த்தவுடனே

ஓங்கி எழும் பெருமழையில்
ஒருதுளி
மழைத் துளியை
கண்ணத்தில்
கசிய விட்டதில்

கண்ணீர்க் குடம்
நிரம்பி வழிகிறது
இது கவலைகள்
சுமந்த காலிக்குடமல்ல
காதலை சுமந்த
காட்டாற்று வெள்ளம்
நிரம்பி வழிகிறது பார்
ஆனந்தக் கண்ணீராலே

அனைத்தையும்
அணைத்துக் கொள்வதனால்
காதலை திருடும்
கற்சிலைகளும் துள்ளியாடுகிறது
அவைகளின் வரவேற்பறையில்
நீ

பெருங்காற்றில்
பரவுகிறது பலமொழிகள்
பத்திரப் படுத்து
மழையே

பார்முழுதும் விரிந்து
கிடக்கிறார்கள்
பல
மழைக் காதலர்கள்,,,

எதிர்வினைகள்:

4 comments:

 1. படமும் அது விளைவித்த கவிதையும்
  அருமையிலும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மனம் தொட்ட கவிதை நயம் சொட்டக் கண்டேன்!

  ReplyDelete
 3. நன்றி புலவர் இராமாநுசம் ஐயா!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...