10/05/2015

அன்னையர் தினம்

அன்னை என்றொரு
அழகுண்டு
அவள் அழுது வெடிக்கிறாள்
முதியோரில்லத்தில்

அன்னை என்றொரு
அறிவுண்டு
அவள் அழுகிப்
போகிறாள்
பெண்ணடிமை
பேதமைத்தனத்தில்

அன்னை என்றொரு
சுடருண்டு
அவள் எரிந்து கிடக்கிறாள்
முதுகிலேற்றிய
பணிச் சுமையால்

அன்னை என்றொரு
அன்புண்டு
அவள் சுமந்த
பத்துமாத கருவிற்கு
அவளே நிகராக தெரிந்தமையால்

உந்தன் மனசாட்சி
உறுத்தட்டும்
உயிர் தந்த
அன்னைக்கு
பந்த பாசமற்ற
மிருகமாய் நீ தெரிகிறாயென்று
உந்தன் மனசாட்சி
உறுத்தட்டும்

ஓடி விளையாடி
உன்னோடு உயிராகவே
உறவுகளைப் பேணும்
உத்தமி அன்னைக்கு
உயிராக நீயிருக்க
வேண்டாமா

பசிக்கு உணவு
படுத்துறங்க தாலாட்டு
படிப்பறிவுக்கு
உழைப்பென
உன்னையே நினைத்து
வாழ்ந்து
உயிரை துறக்கும்
அன்னைக்கு அனுதினமும்
நீயும் தாயாகிவிடு

தாய்மை உணர்வுனக்கு
தமிழை புகுத்தும்
தன்னலமில்லா
அன்னையருக்கு
வாழ்த்தொன்றினை
நீயும்
தெரிவித்து விடு

வாழட்டும்
இம்மண்ணில்
தாய்மை

எதிர்வினைகள்:

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...