06/05/2015

அடம்பிடிக்காதே

என்னிடம் என்ன
இருக்கிறது
எதனை எதிர்பார்க்கிறாய்
அன்பானவளே

இதயம் ஒன்றைத்தவிர
வேறொன்றும்
இல்லையே
என்னிடத்தில்

என் முன்னால்
அடம்பிடித்து
நிற்கிறாயே
கொடுத்துவிடு
கொடுத்துவிடுவென
எனை பிசாசாய்
புரட்டிப்போடுகிறாயே

உன் நினைவாக
கைவசம் ஒன்றே
வைத்திருக்கும்
எனதிதயத்தையா
கேட்கிறாய்

எப்படித் தருவேனுனக்கு
எனக்குச்
சொந்தமானதை

அடம்பிடிக்காதே
அவ்விதயத்தில்
நீ மட்டுமே
வாழ்கிறாய்
என்னுள் கரைந்துபோனவள்
நீ

உயிர்துடிப்பு
ஒவ்வொன்றும்
உனது பெயரையே
உச்சரிக்கையில்
ஒழுகும் பனிமலையாக
உன்னை நினைத்தே
உருகி அழுதிடவே
அதுவொன்று
மட்டுமே என்னிடம்
நிரந்தரமாய்
இருக்கிறது

காதலை சுமக்கும்
கடைசித் துடிப்பானது
நின்றபின்

வேண்டுமானால்
எடுத்துக்கொள்
தாராளமாக
எனதிதயத்தை

அதுவரையில்
மண்டியிட்டு
வேண்டிக் கொள்கிறேன்
உன்னிடத்தில்

அடம்பிடிக்காதே
எனதிதயத்தை
என்னிடமே
விட்டுவிடு

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...