26/05/2015

"எமனை வரவேற்க கற்றுக்கொள்"

வட்டிக் கடை
டாஸ்மாக்
மருத்துவமனை
தொங்கும் பலகையில்
நன்றி மீண்டும் வருக!

காவல்துறை
அரசுகட்டிடம்
அரசியல் வாதிகள்
தொங்கும் பலகையில்
திருடர்கள் ஜாக்கிரதை!

மளிகைகடை
துணிக்கடை
குடிதண்ணீர்
பால்
காய்கறி
உணவுவிடுதி
தொங்கும் பலகையில்
எச்சரிக்கை! , அபாயம்!

சட்டப்பேரவை
பாராளுமன்றம்
தேர்தல் வாக்குறுதிகள்
தொங்கும் பலகையில்
அரசியல் பேசாதே!

கல்வி
வங்கிக்கடன்
உழைப்புக்கூலி
பிச்சைக்காரன்
தொங்கும் பலகையில்
இன்றுபோய் நாளை வா!

மதம்
மூடநம்பிக்கை
சாதியம்
பெண்ணடிமை
தொங்கும் பலகையில்
வாழ்க வளமுடன்!

தொழிற்சாலை
அரசு வேலை
விவசாயம்
தொங்கும் பலகையில்
சம்பள ஆளில்லை!

தொங்கும் பலகையெல்லாம்
பலசெய்திகள் சுமந்துநிற்க
சுற்றும் உலகத்தில்
தலைசுற்றி நிற்கிறேன்
தகவலை எழுதுங்கள்
பலகையிலில்லை
என் கல்லறையில்

எமனை வரவேற்க
கற்றுக் கொள்!
என்று,,,,

எதிர்வினைகள்:

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...