02/05/2015

யாரந்த கவிதைக்காரன்

நிழல் பிரியும்
நேரத்தில்
எனதுயிர்
பிரிந்து போனதென்று
வெற்றுடம்பு
புலம்புவதை

காதில் கேட்ட
நினைவுகள்
காதலை சுமந்து
வந்ததென
காதலியவள்
காணத் துடிக்க

கண்ணீரோடு
எனதருகே
எங்கும்
மலர்வளையம்

மரணத்திலும்
அனாதையாக
விட்டுச்சென்ற
ஆன்மாவை
உடனழைத்து

அவள்
அணிவித்த
மலர்வளையம்
மட்டும்
தேடலானேன்

கடைசி கால
அடக்கச்
சமாதியில்
அழுதுக்
கொண்டிருந்த
காதலின்
நினைவுகளுக்கு

யாரோ ஒருவனின்
கவிதைகள்
கரங் கொடுக்குமெனும்

நம்பிக்கையில்
எழ முடியாத
உறக்கத்தில்
நானும்
எனது காதலும்
எனது காதலியும்
எனது நிழலும்,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...