14/05/2015

உழைப்பாளி

எனை தின்றது போதும்
எழுந்திரு என்றேன்
வறுமையை

எனதுடல் இலகுவானதை
உணர்கிறேன்
உழைப்பின் குறியீடு
வியர்வைத் துளிகளாய்
பட்டுத் தெறிக்க

பசியெங்கே பறந்ததென்று பார்க்கும்
விழிகளெல்லாம்
குருடாகித்தான் போனதிங்கே

சோம்பல் சோகத்திலிருக்க
சிரிப்பை என்னாலும்
அடக்க முடியவில்லை

உடல் நரம்புகள் ஒவ்வொன்றாய்
வீறுகொண்டெழ
விடுவேனா
எனதுழைப்பை

அச்சம் என்னிடமில்லை
ஊரார் வசைபாடலுக்கும்
இடம் தரவில்லை

வீழ்ந்தது போதுமென
வீரநடை போடுகிறேன்

நோய்களெல்லாம்
நோஞ்சானாகிப் போக
புதுவுடலில் புத்துணர்வு
பிறக்க
புதுவாழ்வு கைகளசைத்தெனை
அழைக்க

உழைப்பொன்றே
போதுமென
அழைக்கும் திசைநோக்கி நானும் போகிறேன்

மண்ணில் பிறந்த
மானிடனே கூர்தீட்டு
உன்மதியை

உழைப்பே உலகையாளும்
உண்மை நீ உணர வேண்டும்
என்னைப் போலவே
எழுந்து நட
உழைப்பை நம்பி
நீயும் உயர்வு பெற

இன்னுமா என்னைத்
தெரியவில்லை
என்னை "உழைப்பாளி"
என்றழைப்பார்கள்
மானிடனே,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...