11/05/2015

விடுதலையானார்கள் ஜெயலலிதா மற்றும் நால்வர்கள்

விடுதலையானார் ஜெயலலிதா
ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மீது எவ்வித விமர்சனம் வைத்தாலும் அது
நீதிமன்ற அவமதிப்பாவே எடுத்தாளப்படுமென்பது­ நமது அரசமைப்புச்சட்டம்
வலியுறுத்துகிறது . அதன்படி எவ்வித விமர்சனத்தையும் வைக்கப்போவதில்லை.
அதிமுக தலைவர் ஜெயலிலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு
செப்டம்பர் மாதம் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா மற்றும் அவரோடு
சேர்த்து நான்கு பேர்களும் குற்றவாளிகளென்றும், ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு
சிறைதண்டனையும் அதன்கூடவே 100 கோடி அபராதமும் மற்ற நால்வர்களான
சசிகலா,இளவரசி, சுதாகரன், நட்ராஜன், ஆகியோர்களுக்கு 10கோடி அபராதமும்
அதன்கூடவே சிறைதண்டனையும் அளித்து தீர்ப்பு வழங்கினார் குன்ஹா. என்பது
அனைவருக்கும் தெரியும் . இத்தண்டனைகள் மீதான உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு
வழக்கில் கூட பல்வேறு தரப்பட்ட சிக்கல்களும் அரசு வழக்கறிஞர் நியமன
பவானிசிங் சர்ச்சைகளும் எழுந்து ஒருவழியாக இன்று கர்நாடக உயர்நீதிமன்றம்
மேல்முறையீட்டின் மீதான தீர்ப்புரையும் வழங்கிவிட்டது.கர்நாடக
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குமாரசாமி அவர்கள் ஜெயலலிதா மற்றும் நால்வர்
மீதான கர்நாடக சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனைகளை முழுமையாக ரத்து
செய்ததோடல்லாமல் அபராதத் தொகைகளையும் , ரத்துசெய்து சொத்து குவிப்பு
வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக இன்று (2015 மே 11 ) தீர்ப்புரை
வழங்கினார் . இதனடிப்படையில் அதிமுக தலைவர் ஜெயலலிதா விரைவில் மீண்டும்
முதல்வராக பதவி ஏற்பார்(முன்பு மக்களின் முதல்வராக இருந்தவர் தற்போது
மாண்புமிக முதல்வராக மாற்றப்படுவார்) . மேலும் கர்நாடக உயர்நீதிமன்றத்
தீர்ப்புக்கெதிரான கடைசிப் படிநிலையான உச்சநீதி மன்ற மேல்முறையீடு
செய்யும் வழிவகைகளை கர்நாடக அரசு கையாளும் என எதிர்பார்க்கப்படுகிற­து.
அதன்படி பார்த்தோமானால் வழக்கானது இன்னும் நிறைவடையவில்லை என
எடுத்துக்கொள்ளலாம் . ஏனெனில் உச்சநீதிமன்ற தீர்ப்பே ஒரு வழக்கிற்கு
இறுதியான ஒன்றாக அமையும். ஒருவழியாக விடுதலையான முன்னால் மக்கள் முதல்வர்
தற்போது மாண்புமிகு முதல்வராக நாற்காலியில் அமர்ந்து விட்டார்.

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...