08/04/2015

விபத்திற்கு வித்திடும் வாகன வண்ண விளக்குகள்

விபத்திற்கு வித்திடும் வாகன வண்ண விளக்குகள்:

காலவோட்டத்தின் கூடவே பெருகிக்கொண்டிருக்கு­ம் மக்களின் அத்தியாவசியத்
தேவையாகிப்போன வாகனங்கள் சாலையெங்கும் அடைத்துக்கொண்டிருக்க­ும் சிறு
வளர்ச்சிப் பாதையில் நாம் இப்போது அடியெடுத்து வைக்கின்றோம்.இது
பொருளாதாரத்தை உயர்த்திப்பிடிக்கும்­ தனிமனித வளர்சியாகவும் கொள்ளலாம்.
ஆடம்பரத்தின் அவசியமற்ற தேவையாகவும் எடுத்துக்கொள்ளலாம் ஏனெனில் நமக்கான
அடிப்படைத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதே இன்றையப்
பொருளாதார நிலை. உயர்வகுப்பினர்,நடுத்­தர வகுப்பினர்,பின்தங்கி­ய
வகுப்பினரென பாகுபாடின்றி அனைவரிடத்திலும் தங்களின்
பொருளாதாரத்திற்கேற்ற­வாரு இருசக்கர வாகனத்தில் தொடங்கி கனரக வாகனம்
வரையிலான போக்குவரத்து சாதனங்கள் புழங்குகின்றது. ஒரு வகையினருக்கு
வாகனமானது ஆடம்பர பொருளாகவும். ஒரு வகையினருக்கு அதுவே வியாபாரப்
பொருளாகவும் இங்கே அத்தியாவசியத் தேவையாகி சாலை
பற்றாக்குறையாகிவிடுக­ிறது.

ஏற்கனவே சாலை பற்றாக்குறையாகி அதிக நெறுக்கடிகளின் காரணமாகவும் மனிதனின்
தீய பழக்கமான மதுவருந்துதலாலும் சாலை விபத்துகள் பெருகிவிட்ட நிலையில்
தற்போது புது அவதாரமெடுத்து சாலை விபத்துகளுக்கு வித்திடுகிறது "ஆடம்பர
வண்ண விளக்குகள்"
மற்றவர்களின் பார்வை தங்களுடைய வாகனத்தின் மீது விழ வேண்டுமென்ற அற்ப
ஆசைகளின் காரணமாக புதிதாக வாங்கப்பட்ட வாகனத்திலோ அல்லது ஏற்கனவே
வைத்துள்ள வாகனத்திலோ வண்ண வண்ண விளக்குகள் பொருத்தி அழகு
பார்க்கிறார்கள். இது எவ்வளவுபெரிய ஆபத்திற்கு வழிவகுக்கின்றது என்பதை
அறிவார்களா இவர்கள். இரவில் இவ்வாறாக ஒளிரச்செய்யும் வண்ண விளக்குகளினால்
எதிரில் வருபவர்கள் மற்றும் அருகில் பயணம் செய்வர்களின் கவனம் சிதையுண்டு
சாலையில் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பினை ஏற்படுத்தி விடுகிறதிந்த வண்ண
விளக்குகள். தற்போது புதுப்புது கண்டுபிடிப்புகளால் பட்டியலில் கூட
இல்லாத புதுவண்ணங்களை தோற்றுவித்து எல் இ டி எனப்படும் அதிநவீன
விளக்குகளை சந்தைக்கு அறிமுகபடுத்துகிறது தொழிற்நுட்பம். இதன் காரணமாக
தங்களது வாகன கவன ஈர்ப்பினை மையப்படுத்தி அவ்விளக்குகளை வாங்கி
வாகனங்களில் பொருத்தி சாலை விபத்துகளை ஏற்படுத்தும் ஆடம்பர
நடவடிக்கைகளிலிருந்து­ மக்கள் விடுபட வேண்டும். உயிரை பறிக்கும் இவ்வாறான
வண்ண விளக்குளை பொருத்தவது குற்றமென அரசும் அறிவிக்க முன்வர வேண்டும் .
வாகன ஓட்டிகளும், வாகன உரிமையாளர்களும் ,வாகனப்பிரியர்களும் ,ஆடம்பரப்
பிரியர்களும் தயவுகூர்ந்து சமூகத்தின்பால் அக்கரைகொண்டு சாலை விபத்துகளை
ஏற்படுத்தும் வண்ண வண்ண விளக்குகளை வாகனங்களில் பொருத்துவதை தாமாக
முன்வந்து தவிர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகி­றார்கள். ஒரு நாள்
இரவில் சென்னை புதுப்பேட்டையில் சாலையில் நடந்துச் செல்கையில் அங்கே வாகன
உதிரி பாகங்கள் வியாபார வணிக நிறுவனங்களின் வெளியே ஒளிரத் செய்திருந்த
வண்ண வண்ண விளக்குகளை பார்வையிட்டதில் சாலையில் செல்கிறேன் எனும்
சிந்தனையை தொலைத்து நின்ற கணத்தில் எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாமென்ற
கவனச் சிதைவனுபவத்தினால் எழுத வேண்டிய கட்டாயத்தில் இப்பதிவினை எழுத
வேண்டியாயிருந்தது. விலைமதிக்க முடியாத உயிரை வாகன வண்ண விளக்குகளால்
பறிக்காதீர்கள் .

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...