09/04/2015

ஹைக்கூ "வெற்றிட வானம்"

வாய்திறக்கிறாள்
இயற்கையன்னை 
வயிறு நிரம்புகிறது
பகிர்ந்துண்டதால்
 ____ 

வெற்றிட வானம்
 அவள் இடுப்பில் 
ஒட்டியான 
வானவில் 

___ 

அழகே 
அடம்பிடிக்க 
எழுந்தது
விசும்பல் 
மழலை 
மனதை 
வருடுகிறாள்

 ____ 

காற்றை வாங்குகிறது 
கவிதை 
விலையில்லா
 எழுத்துக்களாக 

___ 

பேருந்து எழுப்பும் 
அதிர்வலைகள் 
அவள்
வருகிறாளென்று 

____ 

தீராத பசி 
தினமும் 
சாலையோர 
சந்திப்புகள் 

___ 

கழனிக்காடு
 ஊஞ்சலாடுகிறது 
தூக்கு சட்டியில் 
வருகிறது உணவு 

____ 

கோடரிகளே
கொஞ்சம் 
பொறுங்கள்
பறவைகள் 
பதறுகின்றன 
கைபிடியானேன் 
நான் 

____ 

ஒரு நெல்லுக்கு
வாழ்நாள் 
அடியானது 
கிளி 

____ 

இணையாத 
நதிகள் 
இனிதான் 
ஆரம்பம் 
மூன்றாம் 
உலகப்போர் 

____

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...