02/04/2015

விசப்பாம்பு

பல்பிடுங்கா
விசப் பாம்பொன்று
பக்கத்தில்
ஊர்ந்திருக்க,,,

பயமாக இருக்கிறது
எனக்கு
பல்பிடுங்கிய
நிலையில் பற்றிக்கொண்ட
தீஞ்சுவாலை போலே
தோற்றுப்போகிறேன்
அதனிடத்தில்,,,

அளவாய் வார்த்தையை
அவிழ்த்துவிட
மறந்த வாய்க்கு
விமோச்சனம் தேடியலைகிறேன்,,,

தெரிந்து கொண்டேன்
தொலைந்த
இடத்தை,,,

விடை தந்தான்
வள்ளுவன்
ஆறாதே நாவினால்
சுட்ட வடுவென்று,,,

அறிந்தேன் அதிகம்
தூற்றுவதை
துறந்தேன்
குறையாதச் செல்வமாய்
கூடிநிற்கிறது
புதுப்புது உறவுகள்
என்முன்னால்,,,

இதையா இழக்கத்
தயாரானோம்
இனிதான்
நாவிதழ்
தூற்றிவிடுமா?
நாவடக்கம்
நமக்கோர்
நம்பிக்கை விதையல்லவா,,,

விழுந்த பற்கள்
மீண்டும் முளைத்திருந்தது
எனக்கு,,,

விடுவதாக இல்லை
பல்பிடுங்காத
விசப் பாம்பை,,,

விசத்தை உமிழும்
முன்னே உயிரைச்
சிதையாமல்
விரட்டிவிட எண்ணினேன்,,,
துளியும் பயமெழவில்லை
அப்போது,,,

விடு என்னை,,
நானே போகிறேன்
நாவடக்கம்
உனக்குள்ளே இருக்கையில்
உதவாதினி எனக்கிந்த
விசமென
ஓடியேப் போனதந்த
பல்பிடுங்கா
விசப்பாம்பு,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...