30/04/2015

பூகம்ப புல்வெளிகள்

அடிவிழுதுகளில்
அடிவிழுகிறது
எதுவும் நிரந்தரமில்லை
சொல்லிவிட்டுச்
செல்லும்
நேபாள பூகம்பம் புரியவைக்கும்
இயற்கை சீற்றத்திற்கு நடுவே சிக்கிய உயிர்களுக்கு
ஒருதுளி கண்ணீர் போதாதுதான்
ஓ!!! வென
அழுதுவிடுகிறேன்
அன்றே அழிக்காதே
இயற்கையை
என்றேன்
அதன் வழிதனில் குறுக்கிட்ட குறுக்குப்புத்தி கொண்டவர்கள்
நாமல்லவா
அதிரும் பூமியில் அழுதொன்றும்
பயனில்லை
இப்போதெனும்
இயற்கையை
நேசித்துவிடு
நமதுள்ளங்களில் துள்ளியெழும்
துர்நாற்ற
எண்ணங்களை
தூரே எறிந்துவிட்டு துன்பம்
பகிர்ந்து கொள்வோம்
பலிவாங்கி பசிதீர்த்தாலும் பாய்விரிக்கும்
இயற்கையை
நம்பியே
நமது வாழ்வும்
வளமும்
உள்ளதென
உணர்ந்து
ஊர்க்காவல்
புரிவோம்
உலக சீற்றத்தை
நாமும்
குறைப்போம்
நேபாள பூகம்பத்து புழுதியில்
மாண்ட எம்மின உயிர்களுக்கு
ஆழ்ந்த இரங்கல்
அனுதாப
அலைகளாக
அவரவர்
ஆத்மாவில்
உயிர்தெழட்டும்

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...