26/04/2015

அந்திமாலை

மோகத்திரை கொண்டு
கைகளால் முகத்தை
மறைக்கத் தெரியாமல்
திணறிக் கொண்டிருக்கிறேன்,,,

திரண்டு வந்து
என்மடியில்
குழந்தையாகிவிடும்
அந்திமாலை
வானத்தை,,,

அனுவனுவாக
கொஞ்சி முத்தமிடுகிறேன்,,,

மோகமின்னும்
தீர்ந்தபாடில்லை
மேகமின்னலை
எடுத்து வாருங்கள்
ஊஞ்சலாய்
கட்டிவிட்டு
உறங்க ஒரு
தாலாட்டும் நான்
பாடிட வேண்டும்
அந்திமாலை
குழந்தைக்காக,,,

அதோ!!!
கண்களை திறந்து சமீபத்துச் சாம்பலெடுத்து
முகத்தினில் பூசிக்
கொள்கிறேன்,,,

எனைக் கொன்றுத்
திண்றிட சுதந்திரமும்
தந்து விட்டேன்
அந்தி மாலைக்கு,,,

எட்டா தூரத்தில்
நீயிருந்தும்
காலுக்கு கொலுசாகிவிடும்
கடலலைபோல
அந்திமாலையே
நீயழகாக
தெரிவது
எனக்கு மட்டுந்தானா?

நீ வேண்டும்
நீ வேண்டுமென்கிறது
உனதன்பைச்
சுமக்கும்
என்மனது,,,

அந்திமாலையே
அதற்குள் மறைந்துவிடாதே
எனதருகில்
அமர்ந்துவிடு
உனக்கு நான்
தினந்தினம்
தாயாகிடுவேன்,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...