12/03/2015

மனித கழிவை மனிதனே இனி அள்ளத் தேவையில்லை

வருகின்ற 15-ம்தேதி முதல் மனிதக் கழிவுகளை மனிதன் அள்ள தடை அமலாகிறது. -
தமிழக அரசு அறிவிப்பு.
மனித கழிவுகளை இனி மனிதனாக சொல்லப்படுவர்கள் அள்ளும் அவலத்திலிருந்து
விடுதலை அளித்திருக்கிறது ஆளும் அரசு . ஏன் "மனிதனாக சொல்லப்படுபவர்கள்"
என்கிற வார்த்தையை இங்கே வைக்கிறீர்கள்? மனிதன் என்றால் அனைவருமே மனிதன்
தானே என வாதம் வைக்கலாகும் . இதற்கு காரணமுண்டு அனைத்து மனிதனும் மலம்
அள்ளும் அவலப்பணியை செய்துவிட வில்லை ஆதிக்கச் சாதியினராக காட்டிக்கொண்டு
ஒரு சமூகத்தை அடிமை படுத்தி வைத்திருக்கிறார்களே ! அந்த "தலித்திய"
சமூகம் மட்டுமே இந்த மலம் அள்ளும் அவலப்பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள் .
இவ்வவல நிலையினை முன்வைத்து ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன்.

http://arumbithazh.blogspot.in/2014/12/blog-post_56.html

தலித்தியத்தின் வீழ்ச்சி தொடங்கிக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் அரசு
வெளியிட்ட தடை உத்தரவு மற்றும் மாற்றுத்தீர்வு நடவடிக்கைகள் கொஞ்சம்
ஆறுதலான விஷயம் தான் .
தலித்
என்றால் சாக்கடை சுத்தம் செய்யும் பணி தலித் என்றால் மலம் அள்ளும் பணி
யென ஒடுக்கப்பட்ட மக்கள் இன்ன தொழில் தான் செய்ய வேண்டுமென்று ஆதிக்கச்
சாதி வர்க்கத்தினரே தீர்மானிக்கிறார்கள் . மலம் அள்ளுதல் என்பது அவ்வளவு
கொடிதா? எங்கள் கக்கூசை நாங்களே சுத்தம் செய்து கொள்கிறோம் இதுபோலவேதான்
அவர்களும் செய்கிறார்கள் என பல முகங்கள் நியாயத்தராசை தூக்கிக்கொண்டு
வலம் வரலாம். ஆனால் தங்களின் கக்கூசை சுத்தம் செய்திடுதல் என்பது
உங்களுக்கு கடமை அது தவிற வேறெதுவும் பணியில்லை உங்களுக்கு,, ஆனால்
தலித்தின மக்களுக்கு அதுவே முழுப்பணியாக திணிக்கப்படுகிறது. கடமை
என்பதற்கும் தொழில் (அ) பணி என்பதற்கும் வேறுபாடுண்டு தானே,,
தமிழக அரசியின் இந்த முடிவானது மிகவும் வரவேற்கத்தக்க செயலாகும் . இந்த
மனித மலம் அள்ளும் தாழ்த்தப்பட்ட தலித்திய மக்களுக்கான அவலநிலையை போக்கிட
பாடுபட்ட அனைத்து அரசியலாளர்களுக்கும் , இயக்கத்தாரர்களுக்கும­்
மனமார்ந்த நன்றியினை தெரிவிக்க தலித்தின மக்கள் கடமை பட்டுள்ளுனர்.
ஆண்டாண்டு காலமாக ஈனத் தொழிலை செய்யுங்கள் என்று திணித்த ஆதிக்கச்
சக்திகள் முற்போக்கச் சிந்தனையாளர்களிடம்
தொல்வியடைந்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணரும் பொழுது . இந்த தலித்தின
சமூகம் இன்னும் விரைவாக எழுந்து நிற்க வேண்டும் என்று இதயம் துடிக்கிறது
. இந்த எழுச்சி சாத்தியப்பட அம்பேத்கர் விதைத்த "கற்பி! ஒன்றுசேர்!
புரட்சிசெய்!" என்கிற பொன்மொழியை அனைத்து மக்களும் தத்தம் மனங்களில் பதிய
விட வேண்டும். மீண்டுமொருமுறை தமிழக அரசிற்கு நன்றி! செலுத்த
கடமைபட்டுள்ளோம்.

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...