09/03/2015

சா தீக்கலவரம்

எங்கும் பரவிகிடந்த
சாம்பலின்
புழுதிகளில்
தேடினேன்

அதோ அங்கே
இடிந்து கிடக்கும்
தேவாலயங்கள்
மசூதிகள்
சிறைபட்ட
கோவில்களென
அனைத்திலும்
அலைந்து கொண்டிருக்கிறதென்
அனுதாப
அலைகள்

அவ்வனுதாப
அலைகளில்
ஊடுறுவிச்
செல்கிறதென்
பார்வை

எரிந்த விறகுகள்
முன்பிருந்த
குடிசைகளின்
தூண்களென
அறிந்தேன்
அவற்றின்
அழு
குரலோசையை
கேட்கவியலாமல்
காற்றும்
காதடைத்து போனது

எங்கும்
கண்ணிற்கு
புலப்படவில்லை

உதிர்ந்து விழுந்த
இரத்தங்களையும்
கிளறிப்
பார்க்கிறேன்

இது எந்த சாதிக்குச்
சொந்தமென

எங்கும் கண்ணிற்கு
புலப்படவேயில்லை
சாதியான
சமூகத்தில்
மனிதம்
மரணித்திருப்பதை
கண்டேன்
இன்னமும்
கூசுகிறதென்
கண்கள்

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...