08/03/2015

லிமரைக்கூ "பன்னீர் குளியல்"

லிமரைக்கூ "பன்னீர் குளியல்"


பன்னீரில்
குளியல்
வழிவிடு
அரசியல்வாதி
வருகிறார்
நாற்றம் போகலை
இன்னும்
____

ஏழையின்
நம்பிக்கை
பூட்டிய
கதவுகள்
நம்பி
கையுடைந்தது
___

தாலி
கானாத
மஞ்சள்
அவளின்னும்
வேலி
தாண்டவில்லை
____

மண்ணில்
மடிந்த
பல்லுயிர்கள்
பெண்ணடிமை
இன்னும்
மண்டிக்கிடக்கது
___

சீக்கிரம் வா
அலங்காரம்
அழியவில்லை
தாமதமாகும்
முதிர்கன்னி
____

அலைகடல்
ஓய்ந்தபாடில்லை
வியர்வை
வற்றிப்போனது
வயிறு
பசியென
அலைகிறது
____

கிளை பொந்தில்
கிளி
கீழே வேடன்
பாய்ந்த அம்பு
பயத்தில்
உளறியது
வேறெங்கும்
கிளைகலில்லை
என்று,,,
_____

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...