09/03/2015

சாதியம் நடத்தும் கௌரவக் கொலைகள்

கற்பனைக்கு எட்டாத காட்சியை மையப்படுத்துவதில் போதை ஊசியை உடலுக்கு
ஏற்றுவது போல் அக்கற்பனையின் வலியை மனதிற்குள் ஏற்றுக்கொள்ளதால் எத்தனை
வலிகளையும் தாங்கும் சக்தியை இவ்வுடல் சோதிப்புக் களமாக மாற்றிக்கொள்ளும்
பயிற்சியாகிவிடுகிறது­ இதனை எப்போதும் என் திடப்பொருளின் தீர்க்க முடியா
சக்தியாக மாற்றிக்கொள்கிறேன்.
ஆனால் இது கற்பனையல்ல அக்கற்பனையை அவிழ்த்துவிடும் ஆழ்மனதின் செயல்பாடு
அதை அனுபவிக்கும் தருவாயில் உடல் சிலிர்த்து உள்ளத்தில் சமூகப்பார்வையை
என்னுள் விதைக்கிறது.
இது கற்பனைக்கெட்டாததுதான­் ஆனால் நடக்கும் நிகழ்வுகளின் உண்மைகளில்
சாகிறதென் மனிதம் .
ஆம், அவள் பெயர் தமிழ்ச்செல்வி காதலிப்பதில் காணாத சாதியத்தை
தேடிப்பிடித்து தகப்பன்
அவளுடலை எரிக்கிறான் . அருகிலேயே அவனும் வேடிக்கைப்பார்த்து ரசிக்கிறான்
. இந்த ரசிப்பினைத் தான் இந்த நிகழ்வினைத்தான் என் மனவோட்டத்தில் கற்பனை
செய்து கொள்கிறேன் . கௌரவக் கொலையெனும் இதற்கு
எனதுடல் வைத்த பெயர்
சாதியச் சன்னதியழிப்பு.
இன்னும் எத்தனை வலிகளைத் தாங்குமோ எனதிதயம் என்பதை நானறியேன் ஏனெனில்
நின்றபாடில்லை நிறுத்தும் போக்கில்லை தொடர்ந்து நடந்தேறுகிறது என்
சமூகத்தில் சாதியக் கொலைகள் . உற்றார் உறவினர்களை உடனழைத்து தன் மகளையே
பலியிடும் பல அப்பாக்களின் சிரிப்பொலிகளில் இன்னும் எத்தனை
தமிழ்ச்செல்விக்கள் பலியாகப்போகிறார்களோ
பதறிய உடலில் ரத்தம் சுண்டித்தான் போகிறது . கடைசியாக அவளை தீயில்
சாய்த்துவிட நேருகையில் அவளும் அழமாமல் "நான் சாகப்போகிறேன் என்னை
நிச்சயம் வாழ விட மாட்டீர்கள் எனது நகைகளை இதோ எடுத்துக்கொள்ளுங்கள்­
தம்பி தங்கச்சிகளுக்கு இந்நகைகளை போட்டு அவர்களையேனும் வாழ விடுங்கள்"
என்கிற உணர்ச்சித் தகவலை அவள் தந்திருக்கிறாள் என்றால் அப்போதும் அந்த
சாதிய மிருகம் மனிதத்தை புதைத்திருக்கிறது. தீயில் கருகி மடிந்து போனது
அவளில்லை இந்த மனிதப் போர்வையில் உலா வரும் சாதிய மிருகத்தால் மனிதம்
தான் மடிந்து போகிறது.
ஆழ்மனதில் ஏற்றி வைக்கிறேன் அத்தனை வலிகளும் உடையும் ஒரு நாளை
எதிர்நோக்கி நானும் இந்நிகழ்வினை கற்பனை செய்து ஆழ்மனதில் ஏற்றி
வைக்கிறேன் .

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...