08/03/2015

மகளீர் தினம்

கனல் காற்று
கண்ணுற்ற
பொழுதிலிருந்து
கண்ணிமை
மூடாமல்
பெற்றெடுத்தேன்
உனைநானும்,,,

எனக்குள் நீ
தாயாகவே
உனக்குள்
தாய்மை
புகுத்திடுவேன்
குழந்தாய்,,,

என் அன்பில்
உனை அழைத்திடும்
அழகான
அரவணைப்பில்
எழுந்திடும்
என்கை
தொடுதலை
எப்படி
உணர்வாயென
எனக்கு மட்டுமே
தெரியும்,,,

அத்தொடுதலின்
உணர்சிதனை
உனக்காகவே
சேகரிக்கிறேன்
மாணிக்க
முத்துக்களாய்,,,

அந்தோ!!!
அலறுகிறேனே
மற்றவருனை
தொடும்
வண்மம்
நானறிவேனே,,,

யாரையும்
நம்ப விடாத
நம்பிக்கை
செயலிழந்த
இத்தேசத்தில்,,,

யாரேனும்
கண்டவிடத்தில்
கைவிட்டோ
கால்விட்டோ
தொட்டு விட்டால்
கத்தக்
கூடத் தெரியாதே
உமக்கு,,,

உனை யாரும்
தொடுவதை
எப்போதும்
அனுமதிக்காது
எனதுள்ளம்
இதுவே நானேற்ற
தாய்மையெனும்
உள்ளம்,,,

இன்னமும்
இருக்கிறதிங்கே தூண்டிலிடும்
ஆணாதிக்க
வெறியுள்ளம்,,,

அணைகட்டி
காத்திடுவேன்
அது தானடி
தாய்ப்பாசம்,,,

இருக்கும் வரையில் சீண்டிவிட்டு புணர்வின்பம் பெற்றுவிட்டு
உடலெங்கும்
புழுக்களிட்டு
தூரே எறிவார்கள்
தூக்க கூட
நாதியில்லை,,,

துக்கம் பட்டது
போல் நடித்து
கடைசியில் பட்டமளித்திடுவார்
இங்கே
இந்தியாவின்
மகளென்று,,,

ஆண்
விழி புணர்வு
பார்வையில்
போலி
விழிப்புணர்வு
தெரிகிறது
பார் மகளே,,,

அப்பார்வை
பார்முழுதும்
தெறிக்கிறது
பார் மகளே,,,

காப்பது மட்டுமே தாய்மையின்
கடமையெனில்
உனை
கரைசேர்ப்பது
இந்த தாய்க்கு
சிரமம்தான்,,,

சிரித்து சிரித்து சிதையில்
தீ வைக்கிறது
சீதை மேல்
தீ வைத்த
கூட்டம்,,,

இன்னும்
எல்லாவித
துயரமும்
தாங்குவேன்
எனதருமை
குழந்தையே

நீயுமொரு புரட்சி
மகளாய்
வந்திடவே

பெண்ணடிமை
போக்க பூமியில் முளைத்தோரை
முழுதாய் ஏற்று முளைத்தெழும் விடுதலைக்காக
உனையே
சரணடைந்து
தாய்பாலில்
தைரியமூட்டி

எனக்கு நீயும்
உனக்கு நானும்
உண்மையாய்
பரிமாறிக்
கொள்வோம்
அந்த புரட்சி
விதை தந்த
இந்நாள்
உலக
மகளீர் தினத்தை

வளர்த்திடுவேன்
உனைநானும்
புது வரலாறு
படைத்திடவே
கேளடியென்
குழந்தை
மகளே

வளர்த்திடுவேன்
உனைநானும்
புது வரலாறு
படைத்திடவே!

எதிர்வினைகள்:

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...