20/03/2015

பூக்களின் மௌனம்

வண்டுக்குத் தேனாக
பூஜைக்கு மலராக மங்கையர்க்கு
மாலையாக

மறைந்துபோன
மனிதச் சொல்லாடல்
மறைந்து போய்
பிணமென பெயரிட்டதில் மலரஞ்சலியாக

பல கோண
காட்சிதரும்
பூக்களே
நீங்கள் மட்டும்
மௌனம் சூடிக்கொண்டதேனோ!

ஏதேனும் காரணமுண்டோ
மௌனம்
கலைத்துவிட
வழியேனுமுண்டோ

சூரியக் கருவறையிலே
கல்லறையாகாதோ
பூக்களே உங்களின்
மௌனம்
இதழ்களின்
மௌனம் கலைத்து இருண்டுலகில்
வெளிச்சம் பரப்பலாம்

இன்னும் சாதனைகள்
பலபுரிய
பாறையான மனதை
பக்குவமாய்
திறந்தெழுந்து
நீங்கள் சூடியுள்ள உங்களுக்கு
சூட்டிய
மௌன மாலையை
இப்போதேனும்
அவிழ்த்து வீசிவிடுங்களேன்

மௌனமாய்
மலர்ந்தது போதும்
மலர்களே
எழுந்திருங்கள்
பிறவி எடுத்ததே
பிழைக்க வழிதேடத்தானே
பரந்த பூமி
அழைக்கிறது

ஓய்வை விரும்பாதவர்கள் நீங்கள்
சிரித்து மகிழுங்களேன் மலர்களே கொஞ்சமேனும் மௌனம்
களையுங்களேன்!

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...