15/03/2015

எது தாய்மை

"எது தாய்மை"

விட்டில் பூச்சிகள்
வீடெங்கும்
நிறைந்திருக்க,,,

உள்ளே
நுழைந்தவளோ
விளக்கேற்ற
மறுக்கிறாள்,,,

முற்றிப்போன
வாசல் மரத்திலோ
முளைக்க
துடிக்கிறது
முதுமையின்
சித்தாந்தங்கள்,,,

அவளும் பெண்
இவளும் பெண்
இருவரும்
நின்றார்கள்
அமைதியை
தொலைத்து,,,

அடிக்கடி
வெடிக்கிறது
சமையலறை
அடுப்புகள்
இது அவளுக்கு,,,

உதவாத பொருளெல்லாம்
ஓரிடத்தில்
தஞ்சம் புகுவதுபோல
முடிவினில்
முதியோரில்லம்
இது இவளுக்கு,,,

கூட்டுக்
களவாணியவன்
இரண்டிற்கும்
இசைந்து
கொடுக்கிறான்,,,

குடும்பம் சிதையுண்ட
குப்பை மேட்டில்
குழந்தை,,,

தாய்ப்
பாலில்லை
தவிக்கிறது
குழந்தை
அழகை
மெழுகேற்றுகிறாளாம்
அவள்,,,

நோயுற்று
தாய்ப்பால்
தெம்பற்று
மெலிந்தே வளர்கிறது
குழந்தை,,,

முடிவென்ன
தெரியுமா?
முற்றத்து கொட்டகையில்
கூட
அவளுக்கு
இவளுக்கும்
அவனுக்கும்
இடமில்லை,,,

இப்படியே
தொடர்கிறதே
இரக்கமற்ற
ஈன
வாழ்க்கை,,,

இப்போது கூட
விடியலாம்
தாய்க்குலமே
தாய்மையை
கைவிடாதீர்கள்,,,

பெண்ணிற்கு
பெண்ணே
எதிரியாம்
எழுதியவனின்
பேனா
உடைய வேண்டாமா,,,

தாய்ப்பாலில் தானே
தாய்மை உணர்வு
சிறக்கிறது,,,

பெண்ணினமே
எது தாய்மை
என்பதை
இப்போதேனும்
புரிதலை தேடி
புறப்படுங்கள்,,,

எதிர்வினைகள்:

2 comments:

  1. சிந்திக்கட்டும் அழகு போய்விடும் என்பதால் தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்கள். கவிதை அருமை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...