14/03/2015

கிறுக்கு பிடித்திருக்கிறது

கிறுக்கு
பிடித்திருக்கிறது
எனக்கு,,,

அவள் மீதான
அதீத அன்பினால்
எழும் காதலை
எழுதும்
கவிதையில்
காகிதத்தை
உரசிவிடுகிறது
வார்த்தைகள்
எழா
கிருக்கல்கள்,,,

ஏதோ எழுதி
தொலைகிறேன்
என்றில்லாமல்
எழுதும் போதே
எண்ணத்தில்
அவள்
உதிக்கிறாள்
எழுத்துக்களாக,,,

"காதல்"
மூவெழுத்திற்காக
அகராதியை
புரட்டியே
பொழுதை
கடக்கிறேன்,,,

முடியவில்லை
என்னால்
அவளைப் போலவே
முளைத்து
பூத்துக் குலுங்கும்
மலர்களைபோல
எழுகிறது
புதிது புதிதாக
சொல்லாடல்கள்,,,

காதலையும்
அவளையும்
கடைசிவரை
என்னால்
கட்டுப்படுத்த
முடியவில்லை,,,

கட்டுண்டு
கிடக்கிறேன்
கிறுக்கு
"பிடித்திருக்கிறது"
எனக்கு,,,

கவிதை
கிருக்கல்கள்
அனைத்தையும்
நானும்
அவளுக்காக
சேகரித்தே
வைத்திருக்கிறேன்,,,

எதிர்வினைகள்:

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...