01/03/2015

நேசம்

நேசங்கள்
தேகமெங்கும்
பரவி
தேசமெங்கும்
உலாவர
உதவிடுங்கள்,,,

உண்மை
இதுவென்று
உணரும்
தருவாயில்
மௌனங்கள்
பேசத்துடிக்கும்
பொருத்திருங்கள்,,,

நேசத்தில்தான்
நேர்த்தியான
மொழி
கிடைக்கும்,,,

தென்றல்
நம் மடியில்
தவழத்
துடிக்கிறது
துரத்தி
விடாதீர்கள்,,,

தூய்மையான
நிலவொளியும்
நேசமில்லா
இம்மண்ணை
விட்டு
நகரத் துவங்கி
விடும்,,,

நவநாகரீக
மண்ணின்
மைந்தேர்களே
நகரும்
நிலவொளியை
தடுத்து
விடுதலாகாதோ,,,

தயவு செய்து
செவிசாயுங்கள்
நரக வேதனை
நமக்கு
வேண்டாமே,,,

நேசித்து விடுங்கள்
நம் தேசத்தின்
ஒற்றுமையை
நேசக்கரங்களால்
தலை நிமிரச்
செய்திடுவோம்,,,

மனிதம்
இம்மண்ணில்
காலூன்ற
வேண்டுமெனில்
உண்மை
உள்ளம்
படைத்தோரே
உலக
உயிர்களை
நேசித்து
விடுங்கள்,,,

எதிர்வினைகள்:

2 comments:

  1. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்...!

    அழகிய கவிதை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...