10/02/2015

ஹைக்கூ "மூன்றாம் பிறை"

ஹைக்கூ -மூன்றாம் பிறை-

அருகருகே
இருந்தும்
அமைதி
காத்தது
இரவு
கதிரவை
கண்டதும்
பூத்த மலர்

___

மரணம்
தொடும்
சாதியம்
தானமிடு
ரத்தத்தை

___

நதிகளே
முதலாளிகளா
நீங்கள்
வலைக்காதீர்கள்
வலிதாங்காது
நாணல்

___

வீடு வந்து
சேரவில்லை
மகள்
வண்புணர்வில்
சிக்கியது
மூன்றாம்
பிறை

___

முட்களே
தண்டோடு
இறந்து விடுங்கள்
பறிக்க வருகிறாள்
ரோஜாவை

___

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...