21/02/2015

குயிலிறகு

கொஞ்சம் கொஞ்சமாக
குயிலிறகினை பெயர்த்தெடுத்து
குவித்து
வைத்துள்ளேன்
கூச்சத்தில் குயிலும்
நெளிந்தாடுகிறகு,,,

என்னவள் கார்கூந்தல்
ஏற்குமா
கருப்பிறகினை
குயிலே
கொஞ்சும் மொழியில் கூப்பிடு
என்னவளை,,,

கருவிழிகளில்
காதலெனும்
மைபூசி சுண்டியிழுக்கிறாள்
அவள்
சுருண்டு விழுந்த இதயத்தில்
சுகமாக பரவிய
காதல் தேனை
பருகிட வேண்டும்
நான்,,,

பக்கத்தில்
அமர்கிறாள்
முகபாவனையில்
ஏனோ
முந்திச் செல்கிறது
ஊடல்,,,

குயிலிறகே
குதூகலத்துவிடு
அவள்
கார்கூந்தலில்
உனக்கோர்
இடம்
ஒதுக்குகிறாள்,,,

உன் குழலோசையில்
கொஞ்சம்
ஸ்ருதி சேரட்டும் காதுமடலில்
குயிலோசை
குடிபோகட்டும்,,,

அவளின்
இதழோரம்
இதயக்கனல்
எரிகிறது,,,

எழுந்திரு குயிலே
மயிலிறகு
மடியில்
சாய்கிறது
இப்படியே
வாழ்ந்திட வேண்டும்
நான்,,,

வழியப்புகிறேன்
உன்னை
யுகங்களை தாண்டி மீண்டுமென்னை
பார்க்க வந்துவிடு
நான் பறித்த
உன் சிறகுகள்
பூவுலகில்
மிதந்து
கொண்டிருக்கும்,,,

இதுவரையில்
இதயவலியை
இடம்பெயர
உதவிய
குயிலிறகே
மனதாரச்
வாழ்த்துகிறேன்,,,

மனதிலெழும்
நன்றியினை
மறக்காமல்
வாங்கிக்கொள்,,,

வையகம்
வசைபாடுமுன்னே வாழ்ந்துவிடவும்
எனை நீயும்
வாழ்த்திடவும்,,,

விண்மீன்களை பரிசளிக்கிறேன்
குயிலிறகே
வாங்கிக்கொள்!
விண்மீன்களை பரிசளிக்கிறேன்
குயிலிறகே
வாங்கிக்கொள்,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...