06/02/2015

கவிதை - நியுட்ரீனோ கொலைவாள்

தன்னையே
தனக்கு
தெரியாத
பைத்திய
முகம்கொண்டு
பரவிக் கிடக்கிறது
தமிழினம்,,,

இதில்
பிரபஞ்ச
பிறப்பினை
ஆராயத் துடிக்கிறதா
நம் மனம்,,,

பூமிப் பந்தினை
புழுதிகாட்டில்
வேகவைத்து
புழுவாய்
துடிப்பதை
ரசிக்கவே
ருசிதேடுகிறது
இந்த
பாவியாய் போன
மனம்,,,

தேனீக்கள்
தேனை தேடலாம்
மனிதயினம்
மரணத்தை
தேடலாமா,,,

அழகை ரசிப்பதிலே
அனுபவம்
வற்றிய ஆழ்மனது
கூடுகளை
ஆங்காங்கே
காண்கிறேன்,,,

அதிசய பிறவிதனில்
ஆராய்ந்து பார்ப்பதில்
அப்படியென்ன
அவசரமோ
அணுவை விட
சிறியதாம்
அழிக்க புறப்பட்டது
நியுட்ரீனோ,,,

அழுது அழுது
வரண்டு போனது
மலைச்சாதி
தேனி நிலம்,,,

விரைவில்
சேதி வரும்
கண்ணுக்குத்
தெரியாத
கள்ளிப்பாலெனும்
நியுட்ரீனோ
தேனில் கலந்து
தேனி நகருக்கு
தரப்பட்டதென்று,,

ஏ!!! இயற்கை
அன்னையே
இனி நீதிகேட்டு
நின்றிடாதே!
நீதிமான்கள் தான்
இங்கே நிரந்தர
சுரண்டிகள்,,,

அடிமை விலங்கை
உடைத்தெரிய
பூமித்தாயே
புறப்படு,,,

மீண்டுமொரு
பூகம்பத்தினை
இப்புவி வெளியில்
பரப்பிடு,,,

அப்போதாவது
உணரட்டும்
ஆளப்பிறந்தவர் எனும்
கர்வம் கொண்டு
ஆட்டிப்படைத்திடும்
இம்மானிட இனம்,,,

தன் கருவில்
சுமந்த
இயற்கையெனும்
பச்சைக் குழந்தையை பழிப்பதும், அழிப்பதும்
பாவச்செயலென்று,,,

பூமித்தாயே
புறப்படு
மீண்டுமொரு
பூகம்பத்தினை
இப்புவி வெளியில்
பரப்பிடு!

எதிர்வினைகள்:

2 comments:

 1. தேனீக்கள்
  தேனை தேடலாம்
  //மனிதயினம்
  மரணத்தை
  தேடலாமா,,,//
  நெஞ்சைத் தொட்ட வரிகள்.

  //கண்ணுக்குத்
  தெரியாத
  கள்ளிப்பாலெனும்
  நியுட்ரீனோ//
  பொருத்தமான உவமை.

  கருத்தாழம் மிக்க கவிதைகள்.
  பாராட்டுகள் செந்தழல் சேது.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...