17/02/2015

மகத்தான பால்யம்

புத்தகம்
மயிலிறகு
புழுதி படிந்த
புத்தகப்பை
மடியில்
தவழும்
பால்யபருவம்

எங்கும்
எதிலும்
கானக்கிடைக்காத
கண்ணாடி
ஒளிச்சிமிழ்
ஒளித்து வைத்தவன்
யாரோ

ஓங்கியெழும்
ஒய்யார நடையில்
ஒற்றைக் காதலில்
அழகுப்பறவை
பால்யத்தின்
அண்ணப்பறவை

அழகே
அறிவே
அன்பே
அடுத்த நிமிடம்
விலகிப் போகிறேன்
அழைக்கிறது
கல்லூரி

அங்கேயும்
முளைத்திடுமா
அழகான
பால்யபருவம்

இல்லையில்லை
இது வித்தியாசம்
விழிகளில்
வியப்பினை
தேடுகிறது
அடிக்கவும்
ஆளில்லை
அணைக்கவும்
ஆளில்லை
தானாக தேடியதொரு
தட்பவெப்ப நிலை

மெதுவாக நகரும்
ஏகாந்த மாயை
பார்வையில் எங்கோ
பற்றிய அனல்
தானாக எரிந்தது
நட்பெனும் பஞ்சு

அனுபவம் பெற்றது
கல்லூரியில்
அனுபவத்தது
எப்போதும்
பால்யத்தின்
மடியில்

நித்திரையில்
எப்போது
நிஜமெழும்
கடந்து போன
கல்லூரியை
காற்றோடு சேர்ந்தணைக்க
ஆசை

அழைக்கிறது
அடுத்தது
வாழ்க்கை
போராடியதில்
போர்முனையில்
நின்றது
கத்தி
அப்போதும்
தோற்றே போனது
வாழ்வெனும்
யுக்தி

விடவில்லை
வாழ்வினை
வென்றது
வேட்கையின்
வியர்வைத்துளி
வெறுப்போடு
இவ்வாழ்க்கை
போனாலும்
தயிரை கடைந்த
மத்தாகிபோனது
மகத்தான
பால்யம்

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...