14/02/2015

லிமரைக்கூ "எங்கே காதலர்கள்"

அனைவரின்
கண்களும்
நமை நோக்கியே
காதல் வயத்தில்
தெரியவில்லை
நமக்கு

___

தடயமில்லா
மணல்வெளி
நடுவில்
சிறுகாடு
கடைசியாக
காதல் தேடியது
கால்தடம்

___

இருதயம்
சின்னம்
முளைத்தது
காதலர்தினம்
துடிக்கவில்லை
கல்லறையில்

___

மணலில்
உனதுபெயர்
பிடித்திருந்தது
கடலலைக்கு
கானவில்லை
பெயரை

____

தொடுதிரை
கைபேசி
தொடர்ந்தது
காதல்
எங்கும் குனிந்த
தலைகள்

____

காவியத்தில்
வாழும்
காதல்
வீட்டில்
காதலானது
வாழாவெட்டி

___

காதலில்
பற்றிய
நெருப்பு
கடுஞ்சொல்
வீசிய
உறவுகள்
கடைசிவரை
அணைந்த
பாடில்லை

___

காதலால்
முளைத்த
புதுச்சிறகுகள்
அன்பை
பகிர்ந்து
கொண்டது
அட!
வானளவு
சிறிதானது

____

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...