21/02/2015

மார்க்ஸிய மர நிழல்

ஆடைகளின்றி
அலைகிறார்கள்
அவர்கள்
பருத்தியை
பதம்பார்க்கும்
இவர்கள்
பகிர்ந்தளிப்பார்களா
என்ன
பஞ்சத்தின்
அடையாளம்
அதுவாக
இருக்கிறதே
என்ன செய்ய?

பசி பட்டினியில்
அலைகிறார்கள்
அவர்கள்
நிலம்படாத
பாதங்களாக
இவர்கள்
பதுக்கிய உணவினை
பகிர்ந்துண்பார்களா
என்ன
பற்றியெரியும்
வயிற்றின்
அடையாளம்
அதுவாக
இருக்கிறதே
என்ன செய்ய?

தாகத்தில்
தவிக்கிறார்கள்
அவர்கள்
தர்பாரையே
நடத்துகிறவர்கள்
இவர்கள்
தண்ணீரை பருக
தாராளமாய்
கொடுப்பார்களா
என்ன
விக்கலை விழுங்கித்
தாகம் தணித்தார்கள்
அவர்கள்
அடிமையின்
அடையாளம்
அதுவாக
இருக்கிறதே
என்ன செய்ய?

விடுவதாய் இல்லை
விரட்டிய வறுமை
விதைகளை
பொசுக்கத்
தாயாரான
அவர்களுக்கு
தங்குமிடம் , தன்மான
எண்ணம், தார்மீக
பொருப்பென
தந்துதவியது
மார்க்ஸிய
மரநிழல்

புரிந்தது
அவர்களுக்கு
புரட்சி
விதைகளை
பொசுக்குவது
தவறென்று

போர்க்குணம்
நமக்குண்டு
பூமியை
புரட்டிப்போடும்
பொதுவுடமை
நமக்கென்று
போராளியே
நீ முழங்கு!,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...