24/02/2015

நதியின் தாகம்

வரண்டுபோன
நதியானது
தாகமெடுத்து
கடைசியாக
முத்தமிட்ட
முகங்களை
தேடிக்
கொண்டிருக்க கிடைக்கவில்லை எங்கும்
மணலின்
ஊற்றுப்படுகை

கண்பார்க்கும் திசையெல்லாம் எம்மைப்
போலவே
ஏக்கங்களை
சுமந்த எத்தனையோ
முகங்கள்

எண்ணிப்
பார்க்கிறேன் கடத்தும் லாரிகளில்
கையசைத்து காப்பாற்றென்கிறது
ஆற்று மணல்

அழுவதைத் தவிர
வேறொன்றும்
தோன்றவில்லை

விரலொடிந்த
கைகளையே
விசாலாமாய்
பரப்பிவிட
வெட்டியவன்
அருகிலேயே வேக வைத்திருக்கிறான் கூர்முனை மழுங்கிய கடப்பாறையை

அவ்வளவு
சீக்கிரத்தில் அவனும் நகர்வதாய்
தெரியவில்லை
அனைத்தும்
நகர்மயமாகிப்
போனதால்

மாசந்தோரும்
மழைவருமா
மகிழ்சியில்தான் நதியாடுமா

சிந்தனையில்
சிறகொடிந்த
மனிதர்கள்தான்
மண்ணில்
மையல் கொண்டிருக்க மனசாட்சிதான்
என்ன செய்யும்

மடிந்துபோன
மனசாட்சியை
ஒருமுறையேனும் ஒளிரவிட்டுக்
கேளுங்கள்

ஓராயிரம் கதைகளை
சொல்லும்
உலகம் சுற்றும் வாலிபர்கள்
நதிகளென்று

சிறைச்சாலை
கட்டுவதற்கும்
சிறகொடிந்த
ஆற்று
மணலைத்தான் அள்ளுகிறீர்கள்

அறிவீரோ

ஆருதலுக்கேனும் விட்டுவையுங்கள் விடியுமுன்
கானாமல்
போகின்றோன் காற்றோடு
கரைந்து
போகின்றோம்

விடுதலை தாராயோ விழுங்கும்
மனிதயினமே

எங்களுக்கும்
ஏக புதல்வர்களுண்டு பூமித்தாய்
வயிற்றில்
பிறந்தவர்கள்
நாங்கள்

விடுதலை தாராயோ விழுங்கும்
மனிதயினமே,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...