22/02/2015

வாசல் கோலங்கள்

காலை திங்களவன்
பட்டொளி வீசி
புல் மீது படர்ந்து பனித்துளிகளை
பருகி தாகம்
தணிக்கின்றது
தாவித் தாவி குதிக்கின்றது,,,

வண்டுக்கு
தேனை தந்துவிட்டு
வாடி நிற்கும்
மலருக்கு
வாடா மல்லி
பெயரெதற்கு
வாடியதுதான்
காரணமா
வந்து பழியை
சுமந்து நின்றதும்
சுகமென
எண்ணியதோ
சாளரத்து
திங்களவன்,,,

விடிந்தவுடன்
அவள்
வீட்டு வாசலை
பார்க்கத்
தோன்றுகிறது
எனக்கு,,,

தாகத்திலும்
ஏக்கத்திலும்
திங்களவனும் நானும் ஒன்றென ஓசையெழுப்பிய
ஆலைய மணியோசையை
அப்படியே
உள்வாங்கிய
காதுகளுக்கு
கவர்தலோசை
மிக பிடிக்குமாம்,,,

அவள்
கோலமிடும் அழகிலும் கொக்குகள்
இடம்பெயர்தல்
போல சுற்றி சுற்றி வட்டமிடும்
அவள் இடையினழகை
கோலங்கள்
கவனித்ததாய்
தெரியவில்லை,,,

கவனம் முழுக்க வைத்திருக்கிறது
பார்வையை
தெளிக்கும்
என் கண்கள்,,,

காது மடலோடு
காதல் பூண்டது
கண்கள்,,,

இன்பமயமான
வேளையில்
சத்தமிடும் அவள் கொலுசோ
நாடிநரம்புக் கோர்வைகளில்
குத்தி
விளையாடுகிறது,,,

கோலம் பூசணி
மலருக்காக
காத்திருப்பதை
போல
உன் ஒற்றை
பார்வைக்காக
காத்திருக்கிறேன்,,,

கடைசி வரிகள்
கொலுசோடு சுற்றி வருகிறதென்
கவிதைகளாக
காதலை எப்போது
சொல்வாயோ
காத்திருக்கிறேன்
கண்மணியே!

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...