14/02/2015

யாசிகன்

அகன்ற
பாலைவனச் சோலையில்
ஆங்காங்கே
சுனைநீர்

சுடுகிறது அந்நீர்
சுவையறியா
நாவடக்கத்தில்
நலிந்து போனது
தனிமை

தாகமா!
இது ஏக்கமா!
இந்த மாய உலகம்
ஏக்கம்,ஏமாற்றம்
இரண்டும் எதிர்பார்த்தல்ல

விந்தை உடல்
சிலிர்த்து போனது

எங்கே?
தண்ணீர்! தண்ணீர்!
அக்கினி அறிந்துள்ள
ஆகாச மணல்
சேமிப்பு!

அறியவில்லை
இவ்வறிவிலா
மனம்

அதோ! அதோ!
தொடும் தூரத்தில்
ஏக்கத்தில் எப்போதும்
எதிர்பார்த்தே
சோர்ந்து போனது
அச்சோகப் பயணம்
விரைந்து
விவரமறிய
ஆவல்

மூளையும் இப்போது
முடங்கியே போனது
வரண்ட நாக்கு
வற்றிய வயிறு
வீங்கிய கால்கள்
விழுந்தது மண்ணில்

ஏ! கானல் நீரே
சுனைநீரென
சூழ்ச்சி விதைத்தாயோ
சுருண்ட உடலை
காண
சுகமானதா உனக்கு

இதோ
இவ்வுடலையே
தாரேன்
உளமார
மகிழ்ந்துவிடு
ஒன்றை மட்டும்
கொடுத்துவிடு
ஒவ்வாத இம்மாய
உலகில் ஓரிடத்தில்
எனக்கான
கல்லறையை
அமைத்துவிடு

அதில்
"இவன்
பெயர் யாசிகன்"
எனும்
பொற்சொல்லை
பொதித்துவிடு
காலம்
கதைசொல்லட்டும்

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...