25/01/2015

குடியரசுதினம்

வசந்த கால
செடியொன்று
துளிர் விட
துடிக்கையில்!

தடுத்த
துப்பாக்கிகளோ
தரையில் விழ!

பூமித்தாய் வயிற்றில்
பிரசவித்த குழந்தை செடி துளிர்விட தொடங்கியது!

தோழமைகளை அனைத்தபடி
அடைந்தது சுதந்திரம்!

அன்றுதான் ஆனந்தம்
ஆகஸ்ட் பதினைந்து!

இந்தியதாயின்
இயலாத நிலையோ!
முடமானது முழுச்சுதந்திரம்!

ஆண்டது அப்போதும் ஏட்டிலும் இல்லாத
இங்கிலாந்து
அரசியல் சாசனம்!

எழுத வழிதேடி
இந்தியத்தாயின்
விழிகளில் இமைதேடி!

அமைத்தார்கள்
அரசியல் நிர்ணய
சாசன சபையொன்றை!

கடமை தவறாமல்
தடைகள் பல கடந்து
நாடுகள் பல ஆராய்ந்து
மூன்றாண்டு முயற்சியாக
முடித்தார்கள் பணியை!

அன்றுதான் அரைச்சுதந்திரம்
நவம்பர் இருபத்தாறு!

சிதறிக் கிடந்த
இந்தியாவில்
சீறிவந்தது மூவண்ணம்!

சிறைபடுமா சுதந்திர பறவைகள்
செழிப்பான
அம்மரத்தில்
ஒற்றுமையோடு
நாடமைக்க!

கொஞ்சும் எழிலோசையில்
அகமகிழ்ந்தாள்
இந்தியத்தாய்!

அன்றுதான் முழுச்சுதந்திரம்
ஜனவரி இருத்தாறு

கூவும்
குயிலோசையில்
குடியரசு அமைந்தது!

குனிந்த முதுகும்
நிமிர்ந்து இங்கே
நடக்குது!

இந்திய அரசியல்
சாசனம் வானுயர்ந்து
வாழுது!

இந்தியத் தாய்
பெற்றெடுத்த
குழந்தை செடி!
குடியரசெனும் வரம்பெற்று
அகிலம் போற்றும் ஆளுயர மரமாகி!

இன்றோடு
ஆண்டுகள்
அறுபத்தாறானது,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...