17/01/2015

நிலவோடு நடைபயணம்

என்னோடு நிலவும்
நிலவோடு நினைவும்
நதியோரம்
நடைபழகலானோம்
தினம் தொடரும் பயணமது
பக்குவமாய் தெரிந்தது
இவ்வுலகம்
தமிழை தவழச்செய்தது
முதலில் நிலவுதான்
நிழலாடும் நினைவுகளை
சுமந்தீரே நீரில் முத்தம்
பதிப்பதிலா பதில்முத்தம்
தேடுகிறாய்!
மனதின் மௌனத்தை
கலைத்தேன்
பதிலுரை தரவேண்டுமல்லவா!
நிலவே நீயும் பெண்தானே
உன்னோடு நானிருக்கும்
நேரத்தில் நரிகண்கள்
நதிவிழுங்கி அத்தோடு
ஊடுறுவி இணைந்தார்கள் இவர்களென
புதுக்காதல் பூகம்ப
பூமிச் சுமையாகுமென
புரளிதனை கட்டவிழ்த்து
புகழுக்காய் என்னவளிடம்
மண்டியிட
புன்சிரிப்பு உதிர்த்தபடி
புரிதலில் பூவாகிப்போன புவியரசியவள்
நரி கண்களுக்கு சொன்ன சேதி இதுதான்! செவிகொடுத்து கேளடி நிலவே!
காதலில் கரைபடிந்த
சிந்தையில் சிதறிகிடக்கும்
சிலந்திகள் நாங்களல்ல
என்னவன் மனதும்
ஏற்றிவைத்த சுடரும்
ஒன்றே!
தன்னையழித்து
தன்னுலகை காட்டும்
காதலின் நம்பிக்கை
குழந்தைகள் நாங்கள்!
சொல்லி முடித்ததும்
சினுங்கியது நிலவு
நீரின் பதில் முத்தம் உணர்ந்தேன் ஈரப்பதமது
இதமாய் இவ்வுடல் தழுவ இதுவே பதில் முத்தமென உணர்த்திய
மெய்க்காதலுக்கு
மேகமழை இனி பரிசாகும்
தொடர்வோம் பயணம்
தொலைக்காத நினைவுகளுடனே ! நிலவிடம் விடைபெற்ற சில நாழிகையில்
நதிகளில் நாணல் ஆடிற்று வான்மேகம்
மழை தூவிற்று!
மெய்க்காதல்
மண்வாசத்தோடு
இனி மணக்கட்டும்!
சந்தேகம் சவக்குழியில்
இனிவிழட்டும்!

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...