30/11/2014

பணப்பேயா பறத்தை!

எத்தனை மொழிகள்
அத்தனையும்
நானறிவேன்!
என் மொழி
போலிச் சினுகல்
மட்டுமே!
நவநாகரீக
டாட்டூக்களை
கண்டதும்
கோபமெனுக்கு!
எவனோ! எப்போதோ!
வைத்த சிகரெட்
சூடுகளை விடவா
அழகானது அவையென்று!
வீசிவிட்ட பணம்
தெருவீதிக்கு
வந்துவிட்டாலும்!
தேவாங்கு பார்வையுடனே
பார்ப்பார்கள்!
இது தாசியின்
பணமென
கல்லாப்பெட்டியும்
கண்ணடிக்கும்!
ஆடைகள் வாங்கவே
ஆடைகளை
களைந்தேன்!
அவசர அவசரமாய்
இறங்கிய அவனுறுப்பு
அனுபவித்ததில்
அத்துணை மனைவியரின்
வலைகளையும்
நானறிவேன்!
பணப்பேயா
பறத்தை!
பட்டிமன்றம்
வையுங்கள்
அவைத்தலைவனும்
அவ்வப்போது
விருந்துண்ண வந்ததுண்டு!
கடைசியாக
செவிசாயுங்கள்!
பசிதீர்க்க
உங்கள் முன்னே பறத்தையாக
நானிருக்க பள்ளிச் சிறுமிகளை பாழாக்காதீர்கள்!
பாவம் அவர்கள்
வளரும் விழுதுகள்!

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...