17/11/2014

தண்ணீர் சிற்பங்கள்!

தண்ணீர் சிற்பங்கள்

நெடுஞ்சாலைக் கழுவி நெடுந்தூரப் பயணம்
ஏதோ! தடுக்கிறதே!
ஓ! அணைக்கட்டா!
குழந்தை வயிற்றில் உதைக்கும் உணர்வினை போல் நானுனை
உணர்ந்தேன்!
எங்கே?
நம் விளைநிலச் சொந்தங்கள்
ஒளித்து வைத்து விளையாடாதேயடி
கள்ளி!
திறந்து காட்டு
தீரட்டும் விவசாயப்பசி
அடடே!
கண்ணத்தில் முத்தமிடும் முகம் யாருடையது?
ஓ? மீன்குஞ்சுகளா!
பாசத்தில்
பாசாங்கில்லா
பாசப்பிறவிகள் நீங்கள்தானே!
துள்ளி குதிப்பதன் காரணமென்னவோ!
வானம்பாடி வாசலை நோக்கி வருவதைக் கண்டீரோ!
எங்கே?
நம் மீனவச் சொந்தங்கள் மடியில்
மறைக்காதேயடி கள்ளி! மாசற்ற நம்
உபசரிப்பில் உலகம் போற்றட்டும்! உழைப்பாளி உள்ளம்
குளிரட்டும்!
ஆகா!
இதுயென்ன?
எனை முழுதாய்
மூர்ச்சையடையச்
செய்யும் முழுயின்ப
உணர்வு!
யாரிவர்கள்?
ஓ!
காற்றும் அதனோடு கலந்தாடும் கடலுமா!
எனையே தனதாக்கிக் கொள்ள
வந்தீர்களோ!
இல்லை எனைக் குளிர்விக்க வந்தீர்களோ!
எங்கே?
நம் பூர்வக்குடி மக்களை
கூப்பிடுங்கள்! குதூகலத்தோடே தொடங்கட்டும்!
திருவிழாக் கொண்டாட்டங்கள்! நம்மிசைத் தாயினை அழையுங்கள்
தென்றலில் தேனொழுவட்டும்! தோல்விகள் யாவும் தூளாகட்டும்!
முழு நிலவு என்தோள்மீது
பவனி வருவதைக்
காணுங்கள்! கானக்குயில்களின் கரவோசையினால்
இவ்வுலகம்
கொஞ்சம் இமைதிறக்கட்டும்! இதிகாசங்களை புரட்டியெடுப்போம்!
பூலோக தேவதைகள்
நாம்தானே!
என்னநான் சொல்வது
சரிதானே !

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...