02/11/2014

ஆற்று மணலின் வேண்டுகோள்!

நதிகளைத் தேடி
கடல் அலையும்
காலமிது
கானாமல் போனதேன்?
"விளைநிலங்கள்"
செய்நன்றி சேற்றுப்புழுதியிலே
சிக்கித் தவிப்பதுவோ!
புதையுண்டு கிடக்கிறது
நம் சீவ ரகசியம்!
பிரித்தாளும் சூழ்ச்சியில்
பிரியாமல் கைகோர்க்கும்
கயவர்கள் இவர்கள் தானோ!
உயரத்திலேற்றி
ஊஞ்சலாடிய
மணலோ!
உருகுலைந்து
கண்ணீரை அத்தார்ச்சாலையில்
தெளித்தபடியே!
ஒப்பாரி வைக்கிறது ஆற்றுமணல்!
காதும் செவிடா?
கண்ணும் குருடா?
கடைசியாக
கையெடுத்து வேண்டுகோள் வைக்கிறது மணல்! கொஞ்சம் திரும்பியாவது
பாருங்கள்!
திருத்தங்கள்
நடைபெறட்டும்!
நம் ஆற்றுமணலின் வேண்டுகோள்
இதுவே!
கடத்தாதீர்கள்
பயிர்வளம் அழுகிறது!
அள்ளி ஏற்றாதீர்கள் அழகியச் சோலை
அவமானப்படுகிறது!
விற்காதீர்கள்
விவசாயி விம்மியழுகிறான்!
சலிக்காதீர்கள்
சவக்குழி எலும்புகள் எழுகிறது!
எங்களை ஆற்றோடே சேமியுங்கள்! கரையுடையும்போது
கரம்கொடுக்கின்றோம்!
வண்டலாகிய நான்
வாடலாமா!
விட்டுவிடுங்கள்! மனசாட்சியுடனே
மன்னனையும்
மதிப்போம் நாங்கள்
விட்டுவிடுங்கள்!
கையெடுத்து வணங்க கரமில்லை எங்களுக்கு!
ஆனால்!
கவிழாமல் சேர்ந்தணைக்கும்
(அக்)கரையுண்டு!
விட்டுவிடுங்கள்!
எங்களை
விட்டுவிடுங்கள்!

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...