29/08/2014

-சிறைப்பறவை-

ஆடைக்கும்
உணவுக்கும்
அவசியப்
பணமாதலால்
ஆடையின்றி
படுத்திருந்தேன்!

கட்டில் முழுக்க
மல்லிகையும்
மணம் வீசும்
வாசனைத்
திரவியங்களும்
தெரியவில்லை
மூக்கிற்கு
அந்த மணம்!

மதுவும் சிகரெட் மணமும் கலந்த
கலவை மட்டுமே
கடித்துக்கொண்டே
கொன்றழிக்கிறது
என்னிதழை!

கால்களுக்கிடையில்
அவணுறுப்பு
அழுத்துகையில்!
பசியுடனும்!
வலியுடனும்!
சாகும்

என்வயிற்றுத்
தசையெழுப்பிய
அவ்வொலியை
முனகலென முடித்துவிட்டான்!

முடிவு அறியா
கண்ணீர்த்துளி
மட்டும்
கட்டிலை
நனைக்கிறது!

பசிக்கழுகும்
குழந்தை
இருக்கையில்
பால்குடித்து பதம்
பார்த்த மார்புகள்
அறியவில்லை
அமுக்கிப் பிடிப்பது
அரக்கனென்று!

வலிபொருத்தேன்!
வசைச் சொல்லை
ஏற்றேன்!
மணிதுளிகள்
கடந்தன!

மணிமுத்தான
சிகரெட் சூடுகளின்
மேலே!
விசிறியடித்தான்
பணத்தினை!

பொருக்க
எத்தணித்தேன்
பட்டென
உட்புகுந்தான்
மது பாட்டிலுடனே!
எனை
மணந்தவன்

அனைத்தையும் இழந்தேன்
அதிகாலை
விடிந்தது!
எத்தனை
இரவுகளோ!
எத்தனை
யுகங்களோ!

மணந்தவன்
மதுவால்
இறந்தான்!

மகிழ்ந்தவன் விட்டுச்சென்றான்
வாங்கினேன்
எயிட்செனும் நோயை!

விரையில் எமன்
அழைக்க நானும் போய்சேர்ந்தேன்!

பிள்ளைமட்டும்
பெற்றதற்காய்
பரிகாரம் தேடி! கரைதேர்த்தேன் கடைசிவரை
தாசியெனும்
தாயெனத்
தெரியாமல்!

என்றேனும் உண்மை
அறிந்தால்
உலகை துறப்பானோ!

ஐயோ!

இறந்த பின்னும்
இழிச்சொல்லை
சுமந்தேனே!

நானும் ஒர்
சிறைப்பறவை
தானோ!

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...